மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ஒருபோதும் சேரமாட்டேன்: கதறி அழுத நெய்மர்

324
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் தான் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களாக நெய்மர், 250 மில்லியன் யூரோவுக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படப்போவதாக வதந்தி பரவி வருகிறது.

மேலும், நெய்மரின் ஏஜெண்ட் ரிபேரோ, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் லூயீஸ் வான் காலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக இங்கிலாந்து ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நெய்மர், “மான்செஸ்டர் யுனைடெட் அணியில் நான் சேரப் போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட 250 மில்லியன் யூரோ வரை பேசப்பட்டது. ஆனால் பார்சிலோனா அணிக்காகவே தொடர்ந்து நான் விளையாட விரும்புகிறேன்.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக நான் ஒரு போதும் விளையாட விரும்பியதில்லை. இது போன்ற வதந்தி எனக்கு மனவேதனை அளிக்கிறது” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

நெய்மரின் பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் வருகிற 2016ம் ஆண்டுடன் முடிவடைகிறது.

தற்போது மான்செஸ்டர் யுனைடெட் அணி நெய்மரை குறி வைத்திருப்பதால், அவரது ஒப்பந்தத்தை நீடித்து விட பார்சிலோனா அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

SHARE