மாபியா அமைப்பின் முன்னாள் தலைவர் சுட்டுக்கொலை

258
கனடாவில் மாபியா எனப்படும் கிரிமினல் அமைப்பின் முன்னாள் தலைவர் தனது வீட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.ரொறொன்ரோ நகரின் Playfair Avenue குடியிருப்பில் வசித்து வந்த Rocco Zito(87) இவர், மாலை 5.30 மணியளவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் தெரிவித்துள்ளதாவது, Rocco-வின் வீட்டிற்கு சென்றுபார்த்தபோது, துப்பாக்கிகுண்டுகள் தாக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார் என்று தெரிவித்துள்ளது.

1950 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த இவர், 1950 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளார், அதன் பின்னர் மாபியா அமைப்பின் சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.

ஐரோப்பாவில் மிக பெரிய கோகோயின் கடத்தல் நெட்வொர்க்கினை மாபியா அமைப்பு நடத்தி வருவதாக இத்தாலிய பொலிசார் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இவரை சுட்டுக்கொன்றதாக கூறி Mr Scopelliti(51) என்ற நபர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். தற்போது இந்நபரை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE