மார்பகங்களுக்குள் மறைத்து போதை மருந்து கடத்திய இளம்பெண்: நூதன முறையில் கண்டுபிடித்த பொலிசார் (வீடியோ இணைப்பு)

369

 

 

கொலம்பிய நாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய மார்பகங்களுக்குள் மறைத்து போதை மருந்து கடத்த முயற்சித்தபோது பொலிசாரிடம் பிடிப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் கொலம்பியாவின் தலைநகரான Bogota விமான நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.போகோடா விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று Paola Deyanira Sabillon(22) என்ற இளம்பெண் ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதற்காக வந்துள்ளார்.

பயணிகளை பரிசோதிக்கும் பகுதிக்கு நெருங்கிய அந்த பெண் ஒருவித நடுக்கத்திலும், அதிக அளவு வியர்வை போக்குடன் இருந்தது பொலிசார் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இளம்பெண்ணை பரிசோதித்த அதிகாரிகள் அவரிடம் எதுவும் சட்டவிரோதமாக இல்லை என அறிந்தும், அந்த பெண்ணின் மீதிருந்த சந்தேகம் பொலிசாருக்கு விலகவில்லை.

இதனையடுத்து, இளம்பெண்ணை நவீன பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என நினைத்த அதிகாரிகள், அவரை ‘எக்ஸ்-ரே’ தொழில்நுட்பம் மூலம் உடல் முழுவதையும் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையின்போது இளம்பெண்ணின் மார்பகங்களில் சந்தேகத்திற்குரிய மாற்றங்கள் இருந்ததை கண்டு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர் அளித்த தகவல் பொலிசாரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதாவது, அந்த இளம்பெண் சமீபத்தில் தான் ‘மார்பக மாற்று அறுவை சிகிச்சை’ செய்திருக்கிறார்.

செயற்கையாக பொருத்தப்பட்ட மார்பகங்களுக்குள் இதற்கு முன் தான் பார்த்திராத பொருளை உள்ளே வைத்து தைத்து சிகிச்சை செய்திருப்பதாகவும், அந்த மர்ம பொருளை ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் ஒப்படைக்க வேண்டும் என்ற அனைத்து தகவலையும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணையில் இறங்கிய பொலிசார், அந்த இளம்பெண் கொலம்பியாவில் உள்ள Pereira நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார் என்பது உறுதியானது.

இளம்பெண்ணின் மார்பகங்களுக்குள் இருந்த சுமார் 1.5 கிலோ ‘கொக்கொய்ன்’ வகை போதை பொருளை கைப்பற்றிய பொலிசார் அவரை கைது செய்தனர்.

பின்னர், போகோட்டோ நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் செயற்கை மார்பகங்கள் அகற்றப்பட்டு அதற்குரிய மாற்று சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பொலிஸ் அதிகாரியான Diego Rosero, இந்த போதை மருந்து கடத்தல் மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark

SHARE