மின்னல் வேகத்தில் காபி ஷாப்பிற்குள் பாய்ந்த கார்: ஒருவர் பலி.. 5 பேர் காயம்

263

 

பிரித்தானியாவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின்னல் வேகத்தில் காபி ஷாப்பிற்குள் பாய்ந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் கெண்ட் மாகாணந்தில் உள்ள வெஸ்டர்ஹாம் நகரின் கோஸ்டா என்ற பிரபல காப் ஷாப் ஒன்று உள்ளது

நேற்று மழை பெய்துகொண்டிருந்ததால் ஏராளமானோர் இந்த காபி ஹாப்பின் அருகில் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த ஆடி ஏ-4 ரக கார், ஒன்று அந்த காபி ஷாப்பின் நுழைவு வாயில் வழியாக உள்ளே புகுந்தது.

இதில், காபி அருந்திக் கொண்டிருந்த வயதான பெண்மணி ஒருவர் (70) சம்பவ இடத்திலேயே பலியாகினார்

மேலும், 5 பேர் காயமடைந்ததுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வயதான நபர் ஒருவர் காரை ஓட்டி வந்ததாகவும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடனடியாக சாலையை மூடியுள்ளனர்.

மேலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE