மின் சைக்கிள்

170
மின் சைக்கிள்
.
சில கி.மீ., தொலைவில் அலுவலகம் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உடற்பயிற்சிப் பிரியர்கள், தங்கள் பயணத்திற்கு, ‘சைக்கிள் அசிஸ்ட்’ தொழில்நுட்பத்தை நாட ஆரம்பித்திருக்கின்றனர்.

அவர்களை இலக்காக வைத்திருக்கிறது பிரிட்டனிலுள்ள ரெவலுாஷன் வொர்க்ஸ். இது தயாரித்துள்ள, ‘ரெவோஸ்’ என்ற கருவி, மூன்று பகுதிகளைக் கொண்டது.
சைக்கிளின் நடுப்பகுதியில் டிரைவ் யூனிட்டை பொருத்தவேண்டும். ரோலர் கருவியை பின் சக்கரத்தில் மாட்டவேண்டும். இதற்கான மின்கலனை குடிநீர் பாட்டிலை வைக்கும் பகுதியில் மாட்டிக்கொள்ளலாம். பெடல் பகுதியில் ஒரு உணரியையும் மாட்டவேண்டும்.
உடனே இந்த சைக்கிள் மின்சார சைக்கிளாக மாறிவிடும். சைக்கிள்காரர் பெடலை மிதித்தால் தான் இதன் மோட்டார் உதவி செய்யும்.
சைக்கிளின் வேகம் மணிக்கு, 25 கி.மீ., வேகத்தை எட்டும் வரை உதவிவிட்டு தானாக அணைந்துவிடும். 31,250 ரூபாய் இந்திய விலைப்படி இந்த கருவியை, வியர்வை வாசனையுடன் அலுவலகத்திற்கு சைக்கிளில் போக விரும்பாதவர்களுக்கு ஏற்றது என்கிறது ரெவலூஷன் வொர்க்ஸ். அக்டோபரில் இது சந்தைக்கு வரும்.

SHARE