மீண்டும் பொங்குதமிழ் களம் கண்டது வன்னி மண் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையேற்று நடாத்திய நிகழ்வில் தெரிவிப்பு.

294

 

புதுக்குடியிருப்பு நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக கலந்து கொண்டு தமிழ் மண்ணின் எழுச்சியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர். இதுவே யுத்த முடிவின் பின் தமிழன் திரண்டெழுந்த நிகழ்வு எனலாம்.
சிவப்பு, மஞ்சல் கொடிகள் வீதி எங்கும் பறக்க மைதானம் நிறைந்த மக்களுடன் சிவப்பு, மஞ்சல் கொடிகள் மீண்டும் ஒரு முறை சங்கமித்தது. முத்தமிழ் விழா பதாகைகள் பழைய வரலாற்றை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி நின்றது.
மேற்படி நிகழ்வில் கலந்து உரையாற்றிய வன்னி எம்.பி.சி.சிவமோகன் தெரிவிக்கையில் ஈழம் என்பதற்கு தமிழில் நீரில் இருந்து எடுக்கும் தங்கம் என்று பொருள். பாலியாற்றில் மணல் கரைகளில் இன்றும் தங்க துகள்கள் அடிபட்டு செல்வதை காணலாம் என்றார். தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், உடமைகளை இழந்தனர், தாம் வாழ்ந்த பூர்வீக மண்னை இழந்தனர், தமது சுய பாதுகாப்பை இழந்தனர் ஆனால் தமது கல்வியையும், கலாச்சாரத்தையும்  இழக்கவில்லை. இந் நிகழ்வு தமிழனின் கலாச்சாரத்தையும் கலையையும் நிலை நிறுத்தும் ஒரு நிகழ்வு. கலாச்சாரம் என்பது ஒரு இனத்தின் அடையாளம். இன்று எமது தனித்துவத்ததை தமிழன் மீண்டும் ஒரு முறை கலாச்சார நிகழ்வு மூலம் நிறைவேற்றியிருக்கின்றான். முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் வரலாறு முடிந்துவிட்டது என கூறியவர்களுக்கு சிவப்பு மஞ்சல் கொடிகள் மீண்டும் புதிய கதைபேசி நிற்கின்றது.
அன்று அடங்காபற்றில் அரசோச்சிய தமிழன். தனது மண்ணில் கலாச்சார எழுச்சி மூலம் மீண்டெழுவான் என்ற எமது உரிமையை காக்கும் செய்தியை கூறி நிற்கிறான் என்றார். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். முன் நடந்து செல் வன்னித் தமிழா. காத்திடு உன் கலாச்;சாரத்தை, நிலை நிறுத்திடு உன் தமிழினத்தின் அடையாளத்தை என்றார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன். மேலும் நடந்த மேடை நிகழ்வுகளில் கோவலன் கூத்து, காத்தவராயன் கூத்து, அரிச்சந்திர மயான காண்டம், பண்டார வன்னியன் ஆகியவை மேடையேறியது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தென் இந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள் இந்த மக்கள் வலி கண்டவர்கள், எனவே அவர்களுக்குத்தான் முடியும் சிறந்த ஈழமண் படைப்புக்களை படைப்பதற்கு, ஈழ வரலாற்றை எழுதக்கூடியவன் ஈழமண்ணில் இருந்துதான் உருவாக வேண்டும் என்றார்.
13282454_862720607194382_1395413114_o
8e1edbec-0db7-402e-90a2-3495f6adce7b 21bdb1ac-7741-42cb-8af9-0b48c19af243 329c5c58-46c5-42f2-931f-0160608ea7c7
0cef2795-c9c7-4bb0-8039-1d89a95aa20c
2de2cc1d-bc2c-43a6-b715-8bedcfeb68e7
4fa5711c-e717-4b39-a65a-e46cccdf0735 8d1aec6a-6eef-4cfd-b8d2-3d66f39cb6b1 8e1edbec-0db7-402e-90a2-3495f6adce7b 9a02d393-88d7-4a53-b8b9-c1cb96d1c739 21bdb1ac-7741-42cb-8af9-0b48c19af243 72cc15ee-ee10-4e47-a779-e5eb37b62a64 98a69265-b399-43b9-bd9e-11ff87a2bb83 329c5c58-46c5-42f2-931f-0160608ea7c7 363f0f96-7aec-4825-9823-9544c96d0329 4761beeb-9864-4637-a631-d9610e5c70bb 7283c73a-1ef7-4e35-a743-e4abd1ec57c8 30519d52-20c8-40fa-9c49-bc3c953c0943 075940f9-f563-4d92-a7c5-0ab6617c3ad0 77560b37-6f29-4f8e-bf5d-e2e62f31bcb2 78777d53-d9cb-4840-b49c-57ae34f4f5ee 195015a9-2c72-4338-ba75-cc8eb7462a64 626746a9-da1e-4062-a120-28e8537497e8 896030e5-7e54-4f8e-8390-1750db71bd3b 2304050b-30df-4d67-911b-d906d2eff5d9 05086698-957c-454d-9a38-2f4e74669909 6276116d-8c23-4d58-8724-59d2c4e481fb  a1f7bb45-a337-4a0a-9927-00552cad6b65 a05c264e-c588-41cf-a336-44ff3a0bd736 ac6abeed-a8b6-4b5a-98ff-ff45c42ba662 aea632fa-70a2-4c68-a69b-183fff06ff34 b5175927-87f7-48f3-b7bc-c5e16de379bd bcc7cbf5-4edf-40f2-a8f3-616b65b2fe81 cb8a2256-cc6c-4065-b34a-aceabb6a6fa7 cc2858d7-8feb-4672-b98c-dbe68fee68ff d7800a3c-14e0-45f2-809e-3ab9957f9ada e293ff1e-094c-4742-96b2-8253bd004103 f24cdeb4-3eda-4427-aac4-9617732ea3d5
SHARE