மீண்டும் விளையாட வாருங்கள்: மிட்சல் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்த அவுஸ்திரேலியா

295
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்புயல் மிட்சல் ஜான்சனை, அணியின் முதன்மை பயிற்சியாளரான டேரன் லேமன் மீண்டும் விளையாட அழைப்பு விடுத்துள்ளார்.அவுஸ்திரேலிய அணியின் வேகப்புயல் மிட்சல் ஜான்சன், எதிரணி துடுபாட்டக்காரர்களை தனது தனித்துவமான பந்து வீச்சால் அச்சுறுத்தி வந்தவர்.

இதனிடையே தமக்கு விளையாட்டின் மீது இருந்த ஈடுபாடு குறைந்துவிட்டது என்ற காரணம் கூறி திடீரென அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார் மிட்சல் ஜான்சன்.

ஆனால் ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற அனுபவமில்லாத வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அவுஸ்திரேலியா அணி தீவிர ஆலோசனையில் உள்ளது.

இதனையடுத்து, மிட்சல் ஜான்சனை தொடர்புகொண்ட அணி நிர்வாகம், மீண்டும் விளையாட அழைப்பு விடுத்துள்ளது.

அழைப்பினை ஏற்க மறுத்துள்ள ஜான்சன், ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது தமது ஓய்வு குறித்து அறிவித்த ஜான்சன், இது குறித்து கடந்த ஓராண்டாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

SHARE