முடிவை நெருங்கும் ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை

348
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி குறைந்த ரன்னை சேஸ் செய்ய முடியாமல் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஆனால் அவரை தவிர்த்து இந்திய மற்றும் இலங்கை அணியின் ஸ்பின்னர்கள் மொத்தம் 30 விக்கெட்களை வீழ்த்தினார்கள். இந்த மோசமான பந்து வீச்சால் ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது.

இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் 25 ஓவர்கள் வீசி 90 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். மேலும் அவரது பந்து வீச்சு எதிரணி வீரர்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. எனவே இந்த தொடருக்கு பிறகு ஹர்பஜன் சிங் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்படலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

SHARE