முண்டாசுப்பட்டி ரிலீஸ் திகதி அறிவிப்பு

535
              திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த, ராம் இயக்கிய, விஷ்ணு, நந்திதா மற்றும் காளி வெங்கட் நடித்த படம் “முண்டாசுபட்டி”.
குறும்படங்கள் பெரிய படங்களாக உருமாறி வெள்ளித்திரையில் வெற்றிபெறும் காலம் இது. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் ‘முண்டாசுப்பட்டி’. கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்சியில் குறும்படமாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் பலரின் ஆதரவைப் பெற்ற இந்த குறும்படம் இப்போது பெரிய திரைக்கு வருகிறது.
போஸ்டர் வடிவமைப்பு, டீஸர், டிரெய்லர் என அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கும் இப்படத்தின் இயக்குநர் ராம் குமாரை சந்தித்தோம்.
நீர்ப்பறவைப் படத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்த விஷ்ணு இந்தி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 13ம் திகதி வெளியாகவுள்ளது.
SHARE