முதல்தர போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அரவிந்த் லஷ்மண் ஆப்தே, தத்தாஜிராவ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடியுள்ளார்.
1959ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் நாரி காண்ட்ராக்டர் காயமடைந்ததால் அரவிந்த் ஆப்தே துவக்க வீரராக களமிறங்கினார். ஆனால் அந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 8 மற்றும் 7 ரன்களில் அவரை ஆலன் பார்டர் வெளியேற்றினார்.
58 முதல்தர போட்டிகள் மற்றும், பாம்பே அணிக்காக 14 போட்டிகள், ராஜஸ்தான் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடியுள்ள அரவிந்த் ஆப்தே, 6 சதம், 15 அரை சதம் உள்பட 2782 ரன்கள் குவித்துள்ளார். இவரது சகோதரர் மாதவ் ஆப்தேவும் இந்தியாவுக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அரவிந்த் நேற்று மாலை புனேயில் மரணம் அடைந்தார். அவருக்கு மகள் மற்றும் பேரன் உள்ளனர்.