முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சீ.ஐ.டி.யினரை சாமர்த்தியமாக ஏமாற்றி , கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.

276

 

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சீ.ஐ.டி.யினரை சாமர்த்தியமாக ஏமாற்றி , கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.

1

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவும் சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வரை தொடர்ச்சியாக அவரிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப் புலனாய்வுத் துறையினர், நேற்று மாலை மீண்டும் அவரை சீ.ஐ.டி. தலைமையகத்துக்கு வருமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

அதற்குள்ளாக அனுர சேனநாயக்கவின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விபரங்கள் தொடர்பில் அவர் பொலிஸ் சேவையில் இருந்த போது அவருடைய பாதுகாவலர்களாக செயற்பட்டிருந்த பொலிசாரிடம் நேற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன் அனுர சேனநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு வருகை தந்தவுடன் அவரிடம் மேலும் ஒரு வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் அவரைக் கைது செய்து கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதனை அறிந்து கொண்ட அனுர சேனநாயக்க நேற்று தனது குடும்பத்தினருடன் கொழும்பை விட்டு வெளியேறி, மினுவாங்கொடையில் உள்ள தேவாலயம் ஒன்றில் வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் தான் நண்பர்களுடன் கொழும்புக்கு வெளியில் சென்றிருப்பதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தர சற்று தாமதமாகும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

அவரது அறிவித்தலை நம்பி நள்ளிரவு வரை பொலிசார் காத்திருந்த போதும் அனுர சேனநாயக்க விசாரணைகளுக்கு சமூகமளிக்காமல் சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டுள்ளார்.

அதன் காரணமாக இன்று தேடுதல் வேட்டை மூலம் அவர் கைது செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

SHARE