முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி போடப்பட்ட விவகாரம் தமிழர்களை அழிக்கும் செயலாக இருந்தால் அதை வன்மையாக கண்டிக்கிறோம்- கல்வி இராஜாங்க அமைச்சர்

278

 

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி அதிபர் நிருத்தியவாணி திருமதி. சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவியாகிய செல்வி திருமகள் பாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று 21-08-2016 மாலை 4.00 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6)
நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராத கிருஸ்ணன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் வடபகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் புதிய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார். புதிய அரசின் நல்லாட்சித் திட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் மீளெழுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது என தெரிவித்தார். புனர்வாழ்வழிக்கப்பட்ட போராளிகளுக்கு விச ஊசி போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குற்றச்சாட்டா அல்லது உண்மையா என யாருக்கும் தெரியவில்லை இந்தவிடயம் தற்போது பரிசோதனையில் இருக்கிறது அவ்வாறு நடந்திருந்தால் அது மனித உரிமைமீறல் என்பதை யாரும் மறுக்க முடியாது என சுட்டிக்காட்டினார். இது தமிழர்களை அழிக்கும் செயலாக இருந்தால் அதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டார். அவ்வாறே கடந்த காலங்களில் மலையகத்தில் கருத்தடை மூலம் ஒரு இன அழிப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆகவே இன அழிப்பு என்பது தமிழர்களுக்கு புதிதானது அல்ல மலையகப்பகுதியில் நடைபெற்றது போல் வடபகுதியில் நடைபெற்றிருந்தால் அதை கண்டிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலைகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் உள்ளங்களில் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கி வருகின்றது பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வடபகுதிதியில் பாடசாலைகள் உட்பட பல அபிவிருத்தி திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றது. ஆகவே இவ்வாறான பிரசாரங்கள் மூலம் அரசாங்கத்துக்கு கெட்ட பேரை உண்டாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார். எதிர்காலத்தில் நாங்கள் ஒன்றிணைந்து சிந்தித்து செயல்ப்பட வேண்டும் என தெரிவித்தார்.

 

SHARE