முன்பள்ளி ஆசிரியர்களை வடமாகாணசபை முற்றாக உள்வாங்க வேண்டும். வைத்திய கலாநிதி சி.சிவமோகன் நாநாட்டானில் பேச்சு

306
நேற்றைய நாள் நாநாட்டான் ஆரோக்கிய அன்னை மாதா ஆலயத்தில் நடந்த முன்பள்ளிகளுக்கிடையேயான வருடாந்த விளையாட்டு போட்டிகளில் நாநாட்டான் இந்து முன்பள்ளி, அச்சங்குளம் புனிதவளனார் முன்பள்ளி, இராசமடு ஸ்ரீ கணேசா முன்பள்ளி, நாநாட்டான் மரியாய் முன்பள்ளி என்பன பங்குபற்றின. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
  இன்று முன்பள்ளிகள் உரிய நிர்வாக அலகுகள் இன்றி விடப்பட்டுள்ளன. இருப்பினும் நியதிச்சட்டம் ஒன்று முன்பள்ளிகள் தொடர்பில் வடமாகாண சபையில் இயற்றப்பட்டுள்ளதால் வடமாகாண சபை முன்பள்ளிகளை முற்றிலும் உள்வாங்கி அவற்றுக்கான பூரண பராமரிப்பை செய்ய வேண்டும். முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனம் குறைந்தது 10,000 வரையாக உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். அதுமட்டுமல்ல பல இடங்களில் இராணுவத்தின் ஊடுருவல் முன்பள்ளிகளை சிதைத்து வருகிறது. சில முன்பள்ளி பாடசாலைகளில் மாணவர்கள்கூDSC_3181 DSC_3229 DSC_3241 DSC_3248
ட CSD என பதிவிடப்பட்ட மேலாடைகளை அணிந்து வருகின்றனர். இது ஒரு தவறான உதாரணம். சிறுவர்களில் இருந்து இராணுவத்தின் ஊடுருவல் எமது சமுதாயத்தை சிதைத்து வருகிறது. எனவே இவ்விடயத்தில் வடமாகாண சபை கல்வி அமைச்சு நித்திரை செய்யக்கூடாது என்றார்

மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பங்குத்தந்தை அருள்ராஜ் அவர்கள் முன்பள்ளிகளில் பெற்றோரின் பங்கு பற்றி உரையாற்றினார்.
SHARE