மும்பை நகரம் கனமழையால் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

332

 

மும்பை நகரம் கனமழையால் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால், நேற்று ஒரே நாளில் மட்டும் 28.3 செ.மீ மழை அங்கு பதிவாகி உள்ளது.

இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

குர்லா, சயான், விக்ரோலி, மகிம், மட்டுங்கா ரோடு, எல்பின்ஸ்டன் ரோடு மற்றும் பரேல் ஆகிய இடங்களில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின.

இதனால் மத்திய, மேற்கு மற்றும் துறைமுக வழித்தடங்களில் நேற்று அதிகாலை முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

மும்பையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாலும். அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததாலும் பாந்திரா-ஒர்லி கடல் வழி பாலம் நேற்று மூடப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதிகளில் மருத்துவ வாகனங்களுடன் மீட்புக்குழுவினர், கடற்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த கனமழைக்கு, சயான் கோலிவாடா பகுதியில் 2 பேரும், வடலாவில் 2 பேரும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளனர்.mumbai_rain_007

SHARE