முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று குளங்களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடப்பட்டது – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்.

416

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மூன்று குளங்களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு நேற்றயதினம் இடம்பெற்றது.16.11.2014ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் வவுனிக்குளம் சென்ற வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமியஅபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபையின்முல்லைத்திவு மாவட்ட உறுப்பினர் திரு ரவிகரன் அவர்களின் பிரதிநிதி, மற்றும் பிரதேச சபை உறுப்பினர், நீரியல் வள மாவட்ட அலுவலர் சலீபன் ஆகியோர் கலந்து கொண்டு அங்குள்ள நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தினரையும் அங்குள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தினரையும் சந்தித்து உரையாடியதுடன் அக்குளத்தில் மீன்குஞ்சுகளையும் விட்டனர் தொடர்ந்து மதியம் சுமார் 2:00 மணியளவில் முத்தையன்கட்டு குளத்துக்கு விஜயம் செய்தவேலை அங்குமுல்லைத்திவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலன்  அவர்களும் இணைந்து அங்குள்ள மக்களையும் சந்தித்து பின்னர்அக்குலத்திலும் மீன்குஞ்சுகள் விடப்பட்டது, அதனை தொடர்ந்து மாலை 4:00 மணியளவில் மடவாளசிங்கம் குளத்து மீன்பிடியாலர்களை சந்தித்துஅவர்களுடன் உரையாடியதுடன் அக்குளத்துக்கும் மீன்குஞ்சுகள்  விடப்பட்டது,

இந்நிகழ்வில் சுமார் 75000 மீன்குஞ்சுகள் மூன்று குளங்களிலும் முதற்கட்டமாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் மக்களுக்கு இரண்டு மாதகாலத்துக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக விடப்பட்டது, இதன் மூலம் சுமார் 250 நன்னீர் மீன்பிடிக் குடும்பங்கள் அவர்களது வாழ்வாதாரத்தைபெருக்கிக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1   3

4

SHARE