முள்ளிவாய்க்காலில் மாணவி ஒருவரின் இதயஅஞ்சலி!

386

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் யுத்ததினால் கொல்லப்பட்ட தனது உறவினர்களுக்கும், பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்திய மாணவி ஒருவர், பாடசாலை சீருடையுடன் முள்ளிவாக்கால் சென்று யுத்தத்தினால் கொல்லப்பட்ட மாணவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

அதிலும், குறிப்பாக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை எவராலும் மறக்க முடியாது. தமிழின அழிப்பின் முதல்படியானது மாணவர்களின் படுகொலைகள் 42 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்றன.

தமிழ் மக்களின் விடுதலைக்காய் உயிர் நீத்த முதல் மாணவ வீரன் பொன் சிவகுமார் ஆகும்.

இலங்கை மற்றும் இந்திய இராணுவம் இணைந்து வெள்ளைச்சீருடை அணி மாணவர்களை கொன்று குவித்து சாதனைகள் படைத்துள்ளனர் என்பதையும் எவறாலும் மறக்கமுடியாது.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் கிளிநொச்சியை கைப்பற்றும் வரையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் மாணவர்களால் எவ்வித தடங்களும்மின்றி கல்வி கற்க முடிந்தது.

பின்னர் பாடசாலைகள் அகதி முகாம்களாக மாற்றப்பட்டமையினால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கை தடைப்பட்டது.

முள்ளிவாய்க்கள் வரையும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்குள் மாணவர் செல்வங்களும் உள்ளடங்குன்றனர்.

தற்போது முள்ளிவாய்க்களில் காணப்படும் இனப்படுகொலைச் சிதறள்களில், மாணவர்களின் சீருடைகளும் அடங்குகின்றன.

இந்நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை சீருடையுடன் முள்ளிவாய்க்களுக்கு சென்று யுத்தத்தால் கொடூரமாக கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE