முஸ்லிம் பெண்கள்-சட்டங்கள்2 3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :

259

 

3. மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள் :
1. பெண்கள் மாதவிடாயாக இருக்கும்போது அவளுடன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்கூறுகிறான்: ”(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றியும் கேட்கிறார்கள். அது ஒரு தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலம் யிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணு காதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர் களிடம் செல்லுங்கள், என்று நீர் கூறும்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கிறான்; தூய்மை யானவர்களையும் நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 2:222)

28-1406523049-9purdah-system
மாதவிடாய் இரத்தம் வெளியாகி முடிந்து குளிக்கும் வரை இந்தத்தடை நீடிக்கும். காரணம் அல்லாஹ்வுடைய சொல்லாகும்.
”(மாதவிடாய்) பெண்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அப்படி அவர்களிடம் செல்லுங்கள்.
மனைவி மாதவிடாயாக இருக்கும் நிலையில் கணவன் உடலுறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டாலும் மர்ம உறுப்புக்கள் சேராதவிதத்தில் மனைவியிடம் இன்பம் அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
”பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் உடலுறவைத் தவிர (விரும்பிய) மற்றதை செய்து கொள்ளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
2. ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழுவது, நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் அவள் இந்த வணக்கங்களைச் செய்தாலும் அது அங்கீகரிக்கப்படாது.
”ஒரு பெண் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்க வில்லையா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு பெண் மாதவிடாய்க் காலத்தில் விடுபட்டுப் போன தொழுகைகளை அக்காலம் முடிந்தபின் தொழ வேண்டியதில்லை, விடுபட்ட நோன்புகளை மட்டும் நோற்க வேண்டும்.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளுமாறு நாங்கள் ஏவப்பட்டோம். விடுபட்ட தொழுகையை நிறைவேற்றுமாறு நாங்கள் ஏவப்பட வில்லை” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம்)
நோன்பிற்கும் தொழுகைக்கும் இடையில் வேறு படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. தொழுகை நாள் ஒன்றிற்கு ஐவேளைகள் நிறைவேற்றியாக வேண்டிய ஒரு கடமையாகும். தகுந்த காரணங்களுக்காக விடுபட்ட தொழுகையை களா செய்ய வேண்டியது கடமையல்ல, ஆனால் நோன்பு அவ்வாறு அல்ல.
மாதவிடாய் பெண் குர்ஆனை திரையின்றி தொடுவது தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: ”பரிசுத்தமானவர்களைத் தவிர அதை யாரும் தொடமாட்டார்கள்.” (அல்குர்ஆன் 56:79)
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்ர் இப்னு ஹஸ்கி என்பவருக் கும் எழுதிய கடிதத்தில் தூய்மையானவர்களைத் தவிர யாரும் முஸ்ஹஃபைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.” (நூல்: நஸயீ)
இது பிரபலமான, சரியான ஹதீஸாகும். துய்மையா னவர்களைத் தவிர மற்றவர்கள் முஸ்ஹஃபைத் தொடக் கூடாது என்பதே நான்கு இமாம்களின் கருத்தாகும்.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண் குர்ஆனைத் தொடாத நிலையில் அதை ஓதிக்கொள்ளலாம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. மறந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படும் அத்தியாவசிய மான நிலையில் வேண்டுமானால் குர்ஆனை ஓதலாம்.

SHARE