-முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை!- ஹக்கீம்தேசிய தலைவர் பிரபாகரனுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மறந்து விட்டிங்களா?

392

 

முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிநாட்டு கோரிக்கைகளை முன்வைத்ததில்லை.

haheem ltte 533716_426902980735604_1784427692_n hakeem_prabha12 slmc-tna

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாஸையாகும்.

மக்களின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக்க தமிழ் பேசும் அரசாங்க பிரதான அதிகாரியொருவரை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அரசாங்கம் இனவாத மூலாம் பூசியது.

நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழவே விரும்புகின்றனர்.

இந்த நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் முஸ்லிம் மக்கள் வெற்றியடையச் செய்தனர்.

கடந்த அரசாங்கத்திடம் நான் விடுத்த சிறு கோரிக்கையை அரசியல்நோக்கிற்காக பயன்படுத்தி, அரச ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு போதிய கால அவகாசம் இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டியில் வைத்து அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

SHARE