முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது

663
தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய நிலையில் காணப்பட்டது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீளக்குடியமர்ந்து வரும் பகுதியாகையால் இப்பள்ளி வாசலும் புனரமைப்பட்டிருந்தது. இப்பள்ளிவாசல் அமைந்துள்ள வீதி இராணுவத்தினரின் துவிச்சக்கரவண்டி ரோந்து அணிகள் அடிக்கடி செல்லும் பகுதியென அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். நேற்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்திலுள்ள முஸ்லீம் மாணவர்களது வழிபாட்டு இடம் மீது கழிவு ஓயில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையினில் தொடர்ச்சியாக காமல் பள்ளி வாசலும் தாக்கப்பட்டுள்ளமை முஸ்லீம்களிடையே அச்சத்தையும் சீற்றத்தையும் தோற்றுவித்துள்ளது.

யாழ். மானிப்பாய் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஜன்னல்கள் விஷமிகளால் சேதமாக்கப்பட்டன!

யாழ் கமால் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியிலுள்ள முஸ்லிம் வட்டாரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள கமால் பள்ளிவாசலே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இந்தச் சம்பவம் நள்ளிரவு (20) 12.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
ஜன்னல்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும், உடனடியாக பொதுமக்கள் அவ்விடத்தில் குவிந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் வந்து நிலைமையை பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ள எம்.ஓ வீதியில் தினமும் இராணுவத்தினரின் ரோந்து செல்வது வழமை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
SHARE