முஸ்லீம் அரசியல்வாதிகள் சூடு சுரணையற்றவர்கள் – மௌலவிகள் தெரிவிப்பு

728

கடந்த சில மாதங்களாக முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக பொதுபலசேனா என்கின்ற அமைப்பு மிகக் கடுமையான முறையில் எம்மதத்தினையும் கொச்சைப்படுத்தி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துள்ளமையானது முஸ்லிம் சமுதாயத்தினரை மன உளைச்சலுக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமையப் பெறுகிறது. இவ்வாறான ஒரு செயல் நடைபெறக்காரணம் என்னவென்று பார்க்கின்றபொழுது, வெறு மனே பொது பலசேனாவை மட்டும் குற்றஞ்சாட்டுவதாக அல்ல. இன்னும் 20 வருடங்களுக்குப் பின் பௌத்த நாடை முஸ்லிம் நாடாக மாற்றும் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகளை வெகு வாரியாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு செயற்றி ட்டத்தினையே செய்துவருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுவருகின்றது.

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு சில அமைச்சர் அந்தஸ்து வகிப்பவர்கள் குரல் கொடுத்தபோதிலும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்ப்பதும் மனவேதனையளிக்கிறது. ஏற்கனவே அநுராதபுர பிரதேசத்திலிருந்து வழிபாட்டுத்தலம் அகற்றப்பட்டதென்பது வருத்தத்திற்குரியதாகும். இத னைத் தொடர்ந்து ஹலால் போன்ற பல்வேறு பிரச்சினைகள் பொதுபலசேனா அமைப்பினால் எழுப்பப்பட்டபோதெல்லாம் அரசி யல் வாதிகளின் ஒற்றுமை இல்லாததன் காரணமாகவே முஸ்லிம் இனத்தவர்கள் மீண்டும் மீண்டும் பொது பலசேனா வினால் மனஉளைச்சலுக்கும், சாபத்திற்கும் உள்ளாகின்றார்கள். ஜனநா யக நாடொன்றில் மதவழிபாடுகளுக்கான சுதந்திரம் உண்டு. அவ்வாறான சுதந்திரமான செயற்பாட்டிலேயே முஸ்லிம் மதத்தினர் சென்றுகொண்டிருக்கின்றனர். பிறமதத்தினரை எமது பக்கம் திருப்புவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இதுவேண்டுமென்று முஸ்லிம் மக்களுக்கெதிராக இலங்கையரசின் உதவியுடன் தூண்டி விட்ட செயலாகவே எம் சமுதாயத்தினர் கருதுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சங்கரத்ன தேரரின் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானது. கல்முனை வாழ் தமிழ் மக்களின் எல்லைகளை பாதுகாப்பதில் நான் உறுதியாகவுள்ளேன் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனை மாநகரசபையினால் கல்முனை தரவைப் பிள்ளையார் வீதியினை கடற்கரைப்பள்ளி வீதியென பெயர் மாற்றுவதற்கான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்முனையில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர்களான எம். இராஜேஸ்வரன், ரி.கலையரசன், மாநகரசபை உறுப்பினர்களான ஏ. விஜயரெட்ணம், எஸ். ஜெயக்குமார், கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஹென்றி மகேந்திரன், இலங்கை தமிழரசுக்கட்சி மூத்த உறுப்பினர் கே. ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிவுற்று அமைதியாக மூவின மக்களும் வாழ்ந்து வருகின்ற இவ்வேளையில், இவ் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் சில அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக கல்முனை வாழ் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்கு எதிராகவும் அவர்களது பூர்வீக வீதிகளின் பெயர்களையும் மாற்றுவதற்கு எதிராக திட்டமிட்ட வகை யில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் குழப்பம் விளைவிக்க முற்படுகின்றனர். இது கண்டிக்கத்தக்க செயலாகும். கல்முனையில் ஏற்கெனவே அரசி னால் அங்கீகரிக்கப்பட்ட கல்முனை தரவைப்பிள்ளையார் கோவில் வீதி யின் பெயரை கடற்கரைப்பள்ளி வீதி யென பெயர் மாற்றுவதற்கு மேயரினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை தொடர்பில் தமிழ் மக்கள் விசனம் அடைந்துள்ளனர். கல்முனையில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் நிலையில் திடீரென வீதிக்கு பெயர் மாற்றக் காரணம் என்ன? கல்முனையில் மக்களுக்காகச் செய்ய வேண்டிய எவ்வளவோ அபிவிருத்திப் பணி கள் இருக்கின்றபோது மாநகர சபையி னால் வீதிக்கு பெயர் மாற்றுகின்ற வேலை தான் முக்கியமாகப் போய்விட்டதா?

கல்முனையில் தமிழ் மக்கள் மிக வும் பின்தங்கிய நிலையிலேயேயுள்ளனர். இக்கிராமங்களில் போதி யளவு அபிவிருத்திப் பணி களும் முன்னெடுக்கப்படாதது கவலையளிக்கின்றது. கல்முனையைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கும் சரி, இங்குள்ள சிங்கள மக்களுக்கும் சரி உரிமையில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. நாம் இரண்டாம் தரப்பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றோம்.

கல்முனை வாழ் தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உடனடியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி இம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தால் இப்பகுதி தமிழ் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கும் அவரது கட்சிக்கும் என்றும் கிடைக்கும் என்றார் ஸ்ரீ சுபத்திரராம விகாரை ரண்முத்துகல சங்கரத்ன தேரர். எமது சமுதாயத்தினரைப் பொறுத்தவரையில் வீதிக்கு பெயர் சூட்டுவதென்பது அந்நாட்டின் ஜனநாயகத்திற்குரிய விடயமாகும். அதனை நாம் வேண்டுமென்று செய்யவில்லை. வேண்டுமென்று செய்வது போன்ற தொணியில் பொதுபலசேனா அமைப்பு வேறுகோபங்களை வைத்து தமிழ்மக்கள் மீதும், எம்மீதும் இருக்கும் ஐக்கியத்தை வேறுபடுத்தப்பார்க்கின்றது. இவ்வாறு பார்க்கின்றபொழுது விடுதலைப்புலிகள் நல்லவர்கள். விடுதலைப்புலிகள் இருந்தகாலத்தில் மதச்சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. அவர்கள் தமிழீழத்திற்காகவே போராடினார்கள். முஸ்லிம் வழிபாட்டிற்கெதிராக போராடவில்லை.

முஸ்லிம் சமுதாயத்தினர் போராட்டத்தினை காட்டிக்கொடுத்தனர் என்ற காரணத்தினால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி யேற்றப்பட்டார்கள் என்கின்ற துர்ப்பாக்கிய நிலையேற்பட்டது. இக்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளின் போராட்டத்தினை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். தமிழீழத்திற்கான போராட்டத்திலும் பங்கெடுத்தார்கள். சமாதான காலகட்டத்தின்போது முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களை வன்னிப்பிரதேசத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியமையை யாவரும் அறிந்ததே.

மறைந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப் தமி ழிழ விடுதலைப்புலிகளையும் தமிழ்த்தேசியத்தையும் ஆதரித்திருந்தார். அதன் காரணமாகவே அரசினால் திட்டமிட்டு உலங்குவானூர்தியில் அனுப்பப்பட்டு கொல்லப்பட்டார். இதனை சந்திரிக்கா அரசே செய்தது. இன்றைய காலகட்டத்தினைப் பார்க்கின்றபொழுது, அரசுடன் சோரம் போயுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுடைய நிலை மையை மாற்றி முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்தவேண்டிய நோக்கம் தற்போதுள்ளவர்களுக்கு இல்லை என்றே கூறவேண்டும். எமது மதத்திற்கும் எதிராக செயற்படுகின்றபொழுது புனிதப்போரான ஜிகாத் ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு இந்த முஸ்லிம் காங்கிரஸ் தவறிவிட்டது.

மனிதனுடைய வாழ்வில் இறை நமஸ்காரம் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. இன்று அரபு இராச்சியங்களை எடுத்துக்கொண்டால் தமது மதத்திற்காக உயிரைக் கூடக்கொடுக்கின்றார்கள். அரபு இராச்சியங்களில் அமெரிக்கரசு தனது கொடூரங்களை முஸ்லிம் மக்களுக்கும், மதத்திற்கும் எதிராக தூண்டி விடுகின்றபொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் மதத்தின்மேல் பற்றுவைத்து மாண்டுபோன வரலாற்றை நாம் அறிவோம். ஏன் சதாம் ஹூசைன், கடாபி போன்றவர்கள் கொடூரமான முறையில் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தும் கொலை செய்யப்பட்டனர். இதற்கான காரணம் எண்ணெய்வளம் உள்ள நாடு என்பது மட்டுமல்ல. முஸ்லிம் மதம், கலாச்சாரம் போன்றன திறம்பட அந்நாடுகளில் வளர்ந்துவந்தமை போன்ற காரணங்களாகும்.

இதற்காகவே இறைவனுக்காக தமது உயிர்களை இன்னமும் புனிதமாக நினைத்து தியாகமாக்கிக்கொண்டிருக்கின் றார்கள் எம் இனத்தவர். ஆனால் இலங்கையைப் பார்க்கின்றபொழுது மிகவும் மனவேதனையளிக்கிறது. வன்முறையைத் தோற்றுவித்துத்தான் வெற்றிகாணவேண்டும் என்பதல்ல. மகாத்மாகாந்தியைப் போல அஹிம்சை வழியில் போராடி வெற்றியைப் பெற்றுக்கொள்ளமுடியும். அந்தந்த மதத்தினர்களுக்கு அந்தந்த மதத்தினது வழிபாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தது. பௌத்த நாடு என்று கூறிக்கொண்டு சிறுபான்மை இனத்தை அடக்கியாள்வது என்பது ஒரு ஜனநா யக நாட்டிற்கு உரியதல்ல. எமது இறைவழிபாட்டிற்கு எதிராக செயற்பாடுகள் நடக்கின்றபொழுது, அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலகி முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்திக்கொண்டு மதச்சுதந்திரத்தையும், மக்களின் வாழ்வையும் பேணிக்கொடுப்பதற்கு பதிலாக வெறுமனே வாய்வீரம் மட்டும் பேசிவிட்டு அரசியல்வாதிகள் அரசுடன் மீண்டும் கைகோர்த்துநிற்பது என்பது சிறுபிள்ளைத்தனமான விடயமாகும்.

தொடர்ந்து வருகின்ற காலங்களி லாவது முஸ்லிம் அரசியல்வாதிகள் மதம் காணிச்சுதந்திரங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டுமாகவிருந்தால், அரசாங்கத்திலிருந்து விலகி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போன்று செயற்படுவது சிறந்தது. அல்லது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இணைவது என்பது சிறுபான்மை இனத்தவரை மென்மேலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லும்.

கிழக்குமாகாணசபைத்தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப்போவதாகக் கூறிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இறுதியாக அரசுடன் மாறியதானது இன்று அவர் நீதியமைச்சராக இருந்தும் நீதியை ஒழுங்காக செயற்படுத்த முடியாமலுள்ளது. இதற்கான காரணம் என்ன? காலங்காலமாக அரசாங்கத்திற்கு எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்மைகளை ஈட்டிக்கொடுத்தும் அரசா னது நன்றிமறந்த செயற்பாடுகளையே தற்பொழுது செய்துவருகின்றது. தமிழ்மக்களையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் ஓரங்கட்டிவிட்டதாக அரசு நினைப்பது மட்டுமல்லாமல், இனி நாட்டில் எந்தவொரு சிறுபான்மைக் கட்சிகளும் தலைதூக்கக்கூடாது. அவ்வாறு தலைதூக்குபவர்களை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடவேண்டும் என்ற சவா லோடு கூட செயற்பட்டுவருகின்றது.

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களை அழித்தொழிப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளையும் முஸ்லிம் புலனாய்வாளர்களையும் நன்கு பயன்படுத்திய அரசாங்கம், பொதுபல சேனா என்கின்ற அமைப்பை பயன்படுத்தி அரசாங்கமாகிய நாம் எதனையும் செய்யவில்லை இதனை மதவாதி களே செய்கின்றனர் என்கின்ற தோர ணையில் மௌனமாக இருப்பதும் வேதனைக்குரிய விடயமாகும்.

இத்தகைய செயற்பாடுகள் அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாகவிருந்தால் முஸ்லிம் சமுதாயத்தினர் முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்தி அதனோடு அரசாங்கத்திற்கும் ஏனைய கட்சிகளுக்கும் பாடம் புகட்டுவது சிறந்ததொன்றாகும். இதனை விடுத்து மதம், காணி சுதந்திரம் முஸ்லிம் இனத்தவர்களுக்கெதிராகப் பறிக்கப்படுகின்ற பொழுது அரசாங்கத்துடன் வாலைப் பிடித்துக்கொண்டிருப்பது எந்தவித அர்த்தமுமில்லை. ஆகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் இனியாவது சூடுசுரனை யுடன் செயற்படுவது அல்லாஹ்வுக்குச் செய்கின்ற நன்றிக்கடன்களில் ஒன்றாகும்.

– மறவன் –

 

 

 

 

 

 

 

 

 

SHARE