முஸ்லீம் சிங்கள கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் நசீர் முற்படுகிறாரா?சம்பந்தனை சண்டைக்கு இழுக்கிறார்களா?-புயல் களத்தில் இன்று

254

முஸ்லீம் சிங்கள கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் நசீர் முற்படுகிறாரா?சம்பந்தனை சண்டைக்கு இழுக்கிறார்களா?-புயல் களத்தில் இன்று

கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர், சம்பூர் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரி கப்டன் ரஞ்சித் பிரேமரத்னவை கடந்த 20ஆம் திகதி பகிரங்கமாக திட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முதன்முதலாக இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவ முகாமொன்றிற்குள் அதிரடியாகப் புகுந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயலை கேலியாகக் கொண்ட பிரதமர் உட்பட கூட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் பிரதிபலனாகவே இன்று கிழக்கில் கடற்படை அதிகாரி ஒருவரை அவமானப்படுத்தும் விதமாக முதலமைச்சர் நடந்துகொண்டார் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படாவிடில் எதிர்காலத்தில் இதற்கு மேலான ஒரு நிலைக்கு இராணுவத்தினர் முகம்கொடுக்க நேரிடும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE