மூதூர் பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வி­லுள்ள மக்களை பலிக்கடாவாக்கும் சம்பூர் அனல் மின்நிலைய திட்டம்

281

 

மூதூர் பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வி­லுள்ள சம்பூர் பகு­தியில் இந்­திய அர­சாங்­கத்தின் பங்­க­ளிப்­புடன் அனல் மின்­சார நிலையம் ஒன்றை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்­றது. மக்கள் வாழி­டங்­க­ளுக்கு அண்­மை­யாக அமை­ய­வுள்ள இத்­திட்­டத்தை நிறுத்­து­மாறு பொது­மக்­களும் பொது­நல அமைப்­புக்­களும் ஆரம்பம் முதல் கோரிக்கை விடுத்­து­வந்த போதும் மக்­களின் விருப்­புக்கு எதி­ராக அனல் மின்­சார நிலை­யத்தை நிறு­வு­வதில் அர­சாங்கம் முயற்சி எடுத்து வரு­கின்­றது.

இது­சம்­பந்­த­மாக மூதூர் பிர­தே­சத்தைச் சேர்ந்த சில­ரிடம் கருத்துக் கேட்­ட­போது அவர்கள் கூறி­யவற்றை இங்கு தொகுத்து தருகிறோம்.

 


எம்.எஸ்.அமா­னுல்லா
(ஓய்வு பெற்ற அதிபர்)

இன்­றைய நவீன உலகில் மின்­சாரம் இல்­லாமல் எது­வுமே இல்­லை­யென்ற நிலை உரு­வா­கி­விட்­டது. மக்கள் பெருக்­கத்­திற்கும் தொழில்­நுட்ப வளர்ச்­சிக்கும் ஏற்ப  நாளுக்கு நாள் அதன் தேவையும் அதி­க­ரித்துக் கொண்டே வரு­கின்­றது.

ஆகவே, மின்­சார உற்­பத்­தி­யா­னது தேவைக்­கேற்ப அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்­திற்கு இட­மில்லை. ஆனால், மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­வ­தற்­கான வழி­மு­றை­யா­னது மனி­த­னுக்கும் இயற்கை வளத்­திற்கும் ஆபத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் இடம்­பெ­று­மாக இருந்தால் அதனை ஒரு போதும் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது.

இந்­த­வ­கையில் இலங்கை போன்ற சிறிய நாட்­டிற்கு அனல்­மின்­சார உற்­பத்தி பொருத்­த­மா­ன­தல்ல. அனல் மின்­சார உற்­பத்­தி­யின்­போது நீர்,நிலம்,வளி அனைத்தும் பெரும் பாதிப்­பிற்கு உள்­ளாகும்.

கடல் வாழ் உயி­ரி­னங்­களை அழித்­து­வி­டு­வதில் அல்­லது இடம்­பெ­யர்த்­து­வ­திலும் அதேபோல் தரையில் தாவ­ரங்­க­ளி­னதும் விலங்­கு­க­ளி­னதும் இயல்­பான நில­வு­கையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­திலும் அனல் மின்­சார நிலை­ய­மா­னது செல்­வாக்குச் செலுத்தும்.

எனவே, சம்பூர் மக்கள் வாழும் பகு­தியில்  அனல் மின்­சார நிலை­யத்தை நிறுவும் திட்­டத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாக கைவி­டு­வ­தோடு இப்­பி­ர­தே­சத்தில் இல­குவில் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய காற்று , கட­லலை அல்­லது சூரிய சக்தி மூலம் மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­வது சம்­பந்­த­மாக கவனம் செலுத்­து­வது அவ­சி­ய­மாகும்.


ஏ.டபிள்யூ.புஹாரி
(சமூக செயற்­பாட்­டாளர்)

2006ஆம் ஆண்டில் யுத்தம் நில­வி­ய­போது சம்பூர் பகு­தி­யி­லி­ருந்து மக்கள் வெளி­யே­றி­யி­ருந்த    நிலையில் அப்­போது எவ­ரு­மில்­லாத  ­ப­கு­தியில் அமைப்­ப­தற்கு வகுக்­கப்­பட்ட அனல் மின்­சார நிலையம் என்னும் இக்­கு­றித்த  திட்­ட­மா­னது அங்கு  மக்கள் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டதன் மூலம் இயற்­கை­யா­கவே செய­லி­ழந்து விட்­டது.

எனவே, இது அர­சாங்­கத்­தினால் வகுக்­கப்­பட்ட திட்டம் என்­ப­தற்­காக காலா­வ­தி­யான இத்­திட்­டத்தை மக்கள் குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு அண்­மை­யாக செயற்­ப­டுத்­து­வதை எவ­ராலும் ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது.

அனல் மின்­சார உற்­பத்­தியின் போது சூழ­லுக்கு ஏற்­படும் நேர­டித்­தாக்கம் சுமார் 15 கிலோ மீட்டர் வரை நீண்டு செல்லும் நிலையில் மக்­களின் குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு மிக அண்­மை­யாக அனல் மின்­சார நிலை­யத்தை அமைப்­ப­தென்­பது ஒரு உள்­நோக்கம் கொண்­ட­தா­கவே தெரி­கி­றது.
விவ­சாயம் மற்றும் மீன்­பிடித் தொழி­லா­னது  திரு­கோ­ண­மலை மாவட்ட மக்­க­ளது பிர­தான தொழி­லாக இருந்து வரும் நிலையில் இத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்டால் மக்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தென்­பது  வெளிப்­ப­டை­யான விட­ய­மே­யாகும்.

இத்­திட்­டம்­செ­யற்­ப­டுத்­தப்­படும் போது வெளி­யாகும் வாயுக்­களும் தூசு­களும் வெப்­பமும் மக்­களை நேர­டி­யாக தாக்­கு­வ­தனால் பல்­வேறு நோய்­க­ளுக்கு  அவர்கள் ஆளாகும் நிலையும் உரு­வாகும்.

உல­க­ளா­விய ரீதியில் எதிர்ப்­புக்­குள்­ளாகி விலக்­கிக்­கொள்­ளப்­பட்டு வரும் இத்­திட்­டத்தை ஏதோ புதிய திட்­டம்போல் இங்கு செயற்­ப­டுத்­து­வதில் முனைந்து நிற்கும் சக்­தி­க­ளுக்கு எதி­ராக  குரல் கொடுப்­ப­தற்கு காலம் தாழ்த்­தாது அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும்.


எஸ்.எம்.தஸ்லீம்
(வைத்­தி­ய­சாலை அபி­வி­ருத்­திக்­குழு செய­லாளர்)

உலகில் அனல்­மின்­சார நிலை­யங்­களை நிறு­வி­யுள்ள நாடுகள் அதனால் ஏற்­படும் கடும் பாதிப்­புக்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க முடி­யாது திண்­டா­டிக்­கொண்­டி­ருக்கும் நிலையில்  எமது நாட்டில் அதனை புதி­தாக நிறு­வு­வ­தற்கு எடுக்­கப்­படும் எத்­த­கைய முயற்­சி­யையும் ஏற்றுக் கொள்ள முடி­யாது.

சுற்றுச் சூழல் பாது­காப்பில் இன்­றைய அரசு அதி­கூ­டிய கவனத்தை எடுத்­து­வரும் நிலையில் சூழ­லுக்கு பாரிய  அச்­சு­றுத்­த­லாக அமையும் இத்­திட்­டத்தை தொடர்­வதில் விடாப்­பி­டி­யாக செயற்­ப­டு­வது  ஏன் என்­ப­துதான் புரி­யாத புதி­ராக உள்­ளது.

நச்­சுத்­தன்­மை­யற்ற  உணவு உற்­பத்­தியில் கவ­னம்­செ­லுத்தும் அதே­வே­ளையில் உணவு உற்­பத்­தியில் பெரும் பதிப்பை ஏற்­ப­டுத்தும்  அனல்­மின்­சா­ரத்­திட்­டத்தை மரக்­கறி மற்றும் நெற் செய்கைக்கு பெயர்­போன சம்­பூரில் நிறு­வு­வ­தென்­பது பொருத்­த­மற்ற விட­ய­மே­யாகும்.


சட்­டத்­த­ரணி ஜே.எம். லாஹிர்
(மாகாண சபை உறுப்­பினர்)

அனல் மின்­சாரத் திட்­ட­மா­னது சர்­வ­தேச ரீதியில் தோல்­வியைத் தழுவி வரும் திட்­ட­மாக அமைந்து வரு­கின்­றது. இந்­தி­யாவும் சீனாவும் கூட இன்னும் சில ஆண்­டு­களில் அனல்­மின்­சாரத் திட்­டத்தை தத்­த­மது நாடு­களில் கைவி­டு­வ­தற்கு முடி­வெ­டுத்­துள்­ளன.

ஆனால்,இவ்­வி­ரண்டு நாடு­களும் நமது   இச்­சி­றிய நாட்­டிற்குள் அனல் மின்­சார நிலை­யத்தை நிறு­வு­வதில் ஒத்­து­ழைக்­கின்­றன.  எனவே, இந்­நா­டு­களின் நோக்கம் என்­ன­வாக இருக்­கு­மென்று ஊகிக்க முடி­கின்­றது.

எவ­ரது நோக்கம் எது­வாக இருந்த போதும் மக்­க­ளுக்கும் சூழ­லுக்கும் பாத­க­மான எந்­த­வொரு திட்­டத்­தையும் ஆத­ரிக்க முடி­யாது. அதற்கு எதி­ராக எமது செயற்­பாடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சம்­பூரில் அமை­ய­வுள்ள  அனல்­மின்­சார நிலை­யத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து  வரும் நான் இத்­திட்­டத்­திற்கு எதி­ராக மூதூர் பீஸ் ஹோம் மற்றும் கிறீன் ரிங்கோ ஆகிய அமைப்­புக்கள் இணைந்து ஏற்­பாடு செய்த முத­லா­வது ஆர்ப்­பாட்­டத்­திலும்   கலந்து கொண்­டி­ருந்தேன்.  இத்­திட்டம் குறித்த முறைப்­பா­டு­க­ளையும் சம்­பந்­தப்­பட்டவர்­க­ளூடாகச் செய்­துள்ளேன்.

சம்பூர் அனல் மின்­சா­ரத்­திட்­டத்தை  அர­சாங்கம் உட­ன­டி­யாக கைவி­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். இல்­லையேல் இத்­திட்டம் வாபஸ் பெறப்­படும் வரை மக்­க­ளோடு இணைந்து களம் இறங்­கு­வ­தற்கு தயா­ரா­கவே உள்ளேன்.


எஸ். நஸீர்
(பஹ்­ரியா மீன் பிடிச் சங்கத்தலைவர்)

மூதூர் கொட்­டி­யா­ரக்­குடாக் கட­லிலும் அயல் பகு­தி­யி­லுமே மூதூர், கிண்­ணியா மற்றும் திரு­மலை பிர­தேச மீன­வர்கள் நீண்ட கால­மாக  மீன்­பிடித் தொழிலில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

சம்­பூரில் அனல் மின்­சார நிலை­யத்தை அமைக்­கின்ற போது குடாக் கடலில் இருந்து பெரு­ம­ள­வான நீரைப் பெற்றுக் கொள்­வதன் மூலமும் கழிவு நீரை மீண்டும் கடலில் சேர்ப்­பதன் மூலமும் எமது தொழில் சீர­ழியும் நிலை­மையே ஏற்­படும்.

எனவே, நாம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக தொழில் செய்து வரும் கொட்­டி­யா­ரக்­குடாக் கடலில் இருந்து அனல் மின்­சார நிலை­யத்­திற்­கான  நீரைப் பெற்றுக் கொள்ளும் கதை உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்டும். அதே­போல, கழிவு நீரை இந்தக் கடலில் சேர்க்கும் திட்­டத்­தையும் அனு­ம­திக்க முடி­யாது.

திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இவ்­வி­ட­யத்தில் கூடிய அக்­கறை எடுத்து அனல் மின்­சா­ரத்­திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு முன்­வ­ருதல் வேண்டும்.


 சட்­டத்­த­ரணி எம்.எல்.பைஸர்
( சமூக ஆர்­வலர்) 

சம்­பூரில்  அனல் மின்­நி­லை­யத்தை அமைப்­ப­தா­னது உண்­மை­யாக நாட்டின் நலனை அடிப்­ப­டை­யாக கொண்­டதா அல்­லது  அயல் நாடு­களின் அர­சியல் நோக்­கங்­களை மையப்­ப­டுத்­தி­யதா என்ற சந்­தேகம் எழு­கின்­றது.

சம்பூர் அனல் மின்­நி­லையம் மற்றும் அத­னுடன் கூடிய தொழிற்­சா­லைகள் தொடர்­பான சுற்­றாடல் மதிப்­பீட்டு அறிக்கை முறை­யாக   தயா­ரிக்­கப்­பட்­டதா  என்­பது இன்னும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. அனல் மின்­சார நிலை­யத்­திற்­கென மேற்­கொள்ளப்பட்ட காணிச்­சு­வீ­க­ரிப்­பா­னது சட்­டத்தின் ஏற்­பா­டு­க­ளுடன் இணங்கிச் செல்­ல­வில்லை என்­பதே பெரும்­பா­லா­ன­வர்­களின் அபிப்­பி­ரா­ய­மாக உள்­ளது.

நிலை­பே­றான அபி­வி­ருத்­திக்கு சுற்­றாடல் மதிப்­பீட்டு அறிக்கை சரி­யா­ன­தாக அமை­யப்­பெற வேண்­டி­யது முக்­கிய ஒரு அம்­ச­மாகும்.சுற்­றாடல் அறிக்கை ஒன்று பெறப்­ப­டும்­போது பூகோள ரீதி­யான வர­லாற்று அறிக்கை, பிராந்­தி­யத்தில் இருக்கும் மக்­களின் கருத்­துக்கள் மற்றும் விஞ்­ஞான ரீதி­யான அறிக்­கைகள் என்பன உள்ளடங்கியவாறே சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளின்படி கருத்திட்ட பிரேரணையாளர்கள் உள்ளூர் பொது மக்களுடன் முறைசாரா கலந்துரையாடல் அல்லது ஆலோசனைகளைப் பெறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.அத்தோடு கருத்திட்டம் பற்றிய சரியான தகவல்களை உள்ளூர் மக்கள் பெறுகின்றனரா என்பதை கருத்திட்ட பிரேரணையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால், சம்பூர் அனல் மின்நிலையத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பீடு குறித்த உள்ளூர் மக்கள் யுத்தத்தால் இடம்பெயரந்து பல்வேறு மாவட்டங்களில் அகதிகளாக இருந்த நிலையிலும் மக்களின் கருத்து வெளியிடும் மனநிலை   சூன்யமாக இருந்த காலப்பகுதியிலும் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதை தெளிவாக சுட்டிக்காட்ட முடியும்.

எனவே, குறித்த அனல் மின்னிலையம் சம்பூர் பகுதியில் அமைவதை நிறுத்துவதற்கு ஒருமித்த கருத்துடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

SHARE