மேதினம் என்றால் என்ன ?எதற்காக சிவப்பு கொடிகள் ஏந்தி மேதினம் கொண்டாடப்படுகின்றது?

513

 

ன்பான வாசகர்களே ஒரு அறிஞர் கூறிய விடயத்தை ஞாபகபடுத்தியவளாக விடயத்திற்கு வருகின்றேன்.

 

பொய்மை இல்லாமல் உண்மை இல்லை யாவும் உண்மையாக இருந்தால் இந்த உலகத்தில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை எனவே இந்த உலகத்தை நீங்கள் எப்படி காண்கின்றீர்கள்????

1.mai-2016

மேலும் என் பனிவான வேண்டுகோள் என்னவெனில் குறிபிடப்படுகின்ற விடயங்களை ஒரு சுயசிந்தனை பார்வையில் உங்கள் மனதில் விதைத்து விடுங்கள் அதன் போதுதான் ஒரு பொதுநல செயற்பாட்டிற்கான பாதையை விளைச்சலாக பெறுவீர்கள். இப்போது விடயத்திற்கு வருகின்றேன

மே தினம் என்றால் என்ன? இது எப்படி உருவாகியது?எத்தனையாம் ஆண்டு உருவாகியது?

உலகத்தில் வாழுகின்ற தொழிலாளர்கள் முதலாளி வர்கத்தினரின் நசுக்குதலுக்கு மத்தியில் தங்களினது பணிகளை மேற்கொண்டு வந்தனர். எனவே இந்நி‌லைமைகளை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் சுயமாக சிந்திக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக ஒரு தொழிலாளிக்கு எட்டு மணித்தியால வேலை, ஓய்வுதியம், சுகயீன, சுய வேலைகளுக்கான வீடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிகையை சட்டத்தில் இணைக்கப்பட்டு அதனை நடைமுறைக்கும் கொண்டுவரபட வேண்டும் என முதலாளி வர்கத்தினரிடம் கோரினர்.

இதனை தொடர்ந்து முதலாளிவர்கம் மற்றும் இதனை மையமாக கொண்ட அரசியல் அதிகாரிகளினால் அக் கோரிக்கையை ஏற்க மருத்தனர். இதனால் தொழிலாளர்கள் அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் 1884ம் ஆண்டு போராட்டத்தை ஆரம்பித்தனர். எனவே தொழிலாளர்களின் செயற்பாட்டை தாங்கிக்கொள்ள முடியாத முதலாளி வர்கத்தினர் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன் நடவடிக்கையின் பேது நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் வி‌ளைவாக ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர் மேலும் இதற்கு ஈடுகொடுக்க முடியாத முதலாளி வர்கத்தினர் அவர்களினுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். எனவே இந்த உரிமை போராட்டத்தின் விளைவாக உலகத் தொழிலாளர்களுக் உயிர் கொடுத்து தங்கள் உயிர்களை மாய்துக்கொண்ட தியாகிகள் சிந்திய உதிரத்தை யையமாவைத்தே இன்றய தொழிலாளர்கள் சிவப்பு கொடிகள் ஏந்தி அந்த வெற்றியை கொண்டாடுகின்ரனர்.

தொடர்ந்தும் தொழிலாளர்கள் என்றால் யார்???

தாங்கள் செய்கின்ற வேலைகளுக்கான கூலியை பெறுபவர்கள் தொழிலாளர்கள் என்று சுறுக்கமாக கூறலாம். ஆனால் இன்று தொழிலாளர்கள் இன, மத, மொழி ரீதியாக பிரிந்ததோடு நின்றுவிடவில்லை ஒரு இனத்திற்குள்ளே உயர்நதவன், தாழ்ந்தவர் என்றும் படித்தவன், படிக்காதவன் என்றும் பிரிந்து விட்டனர்.

உதாரணமாக அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் நான் வைத்தியர், வாத்தியார், பணக்காரன்

என்ற சுய கௌரவ பாகுபாடுகளுக்கமைவாக மீனவன், விவசாயி, சாரதி உட்பட இன்னும் பல தொழில் புரிபவர்களே தொழிலாளர் என்று ஒதுக்கி பார்க்கப்படுகின்றனர்.
இன்று தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள்தான் என்ன?
உதாரணமாக மருதமுனையில் நெசவு தொழில் பிரதான தொழில்களில் ஒன்றாக காணப்படுகின்றது இதனை அதிகமாக

பெண்கள் மற்றும் விதவை பெண்களே மேற்கொள்கின்ரனர். ஆனால் இன்று தன் தொழிலுக்கான மூலப் பொறுட்களை பெறுவதிலும் முடிவுப் பொருட்களை சந்தை படுத்துவதிலும் பாரிய சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே அம் மக்களிடம் இதனை சரியாக செயற்படுத்துவற்கான திட்டம் இருந்தும்கூட அதனை முன்னெடுத்து செல்வதற்காக அரசியல்வாதிகளோ அல்லது முதலாளிகளோ முன்வரவில்லை இதனால் மருந்திர்கும் கூட உப்பில்லாத ஒரு குப்பையான வாழ்கையை வாழ்துவருகின்ரனர்.

அடுத்தபடியாக கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மீன்பிடி தொழில் பிராதான தொழில்களில் ஒன்றாக காணப்படுகின்றது. ஆனால் இன்று இப்பிரதேசத்திள் தென்மாகானத்தை சேர்ந் சிங்கள மீனவர்களும் சட்டவிரோத மீன்பிடி தொழிலை மேற்கொள்கின்றனர். இதன் போது அங்குள்ள சிறு மீனவர்கள் பாதிக்கப்படுவதுடன் ஒரு முறுகள் நிலையும் காணப்படுகின்றது. எனவே இன் நிலமயைானது எதிர்காலத்தில் இனரீதியான பிரச்ச‌ினைகளை ‌தோற்று விக்கும் என்ற அச்சத்தோடு வாழ்ந்துவருகின்ரனர்.

அடுத்தபடியாக ஒலுவில் துறைமுக நடவடிக்கை காரணமாக அட்டானளசேனை பிரதேசத்து ஒலுவில் மக்கள் 60 மேற்பட்டவர்கள் மற்றும் பாலமுனையில் 19பேர் காணிரீதியாகவும் அப்பிரதேசத்து எட்டு கரவலை மீனவர்கள் உட்பட சிறு மீனவரகளும் பாதிப்புக்களை சுமந்தவர்கலாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பொத்துவில் பிரதேசத்து மக்கள் சட்டவிரோத மீன்பிடி, கல்வி, நிலச்சுரண்டல், சிங்கள மயப்படுத்தள் போன்ற பலவகையான பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் மேலும் சில தமிழ் பிரதேச கிராமங்களில் யுத்தத்தாள் இடம் பெயர்ந்து இதுவரைக்கு எந்த விதமான அடிப்படைவசதிகளின்றியும் வாழ்துவருகின்றனர்.எனவே இப்படியா பிரச்சினைகள் ஒரு புரமிருக்க இன்று உரிமை பெற்றுதருவதாக கூறுகின்ற படித்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கம்தான் என்ன??
உதாரணமாக எமது மாவட்டத்தில் வசிக்கின்ற தொழிலாள‌ர் சிவப்பு கொடிகள் ஏந்தி இந்நிகழ்வை கொண்டாடுகின்ற போது படித்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இத்தினம் பற்றிய தெளிவின்மை காரணமாகவோ அல்லது தங்களினுடை இருப்பிடங்கள் பறிபோகிவிடும் என்ற காரணத்தினாலோ சிவப்பு கொடி துக்குபவர்கள் JVPயினர் என்று பாமரமக்களிடம் கூறி தொழிலாளர்களை இந்நிகழ்விலிருந் துரமாக்குகின்றனர்.

தொழிலாளர்கள் ஆகிய நாம் இன்றயகாலகட்டத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும்?? எனவே நாம் நம்பியிருக்கின்ற உரிமை பெற்றுதருவதாக கூறுகின்றஅரசியல்வாதிகள் எமக்கு சிறந்த பதிலை கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் நான் ரகசியமாக பேசியிருக்கினறேன் என்றும் உம்மாவிற்கு புடவை வாங்கி கொடுத்திருக்கின்றோம் வாப்பாவிற்கு சாரம் வாங்கி கொடுத்திருக்கின்றோம் ஏனையோரகளை நிர்வானமாக விட்டு விட்டோம் என்று மிகத்தெளிவாக கூறியிருக்கின்றார்கள் ஆகவே தொழிலாளர்களே ஒவ்வொரு நானும் நானுமாக சிந்தித்து ஒருமித்த பொதுநலத்தை காண்போம் வாருங்கள்.

ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அனைவருமே ஒரு நாள் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு வரையறை செய்வதற்கு தொழிலாளர்கள் செய்த போராட்டங்கள், தியாகங்கள் பற்றி தெரிந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். மட்டுமல்லாமல் அவ்வாறு போராடி, தியாகங்கள் செய்து பெற்ற பல உரிமைகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. மேதினத்தின் வரலாறு தெரியாததால் தான் உரிமைகள் பறிக்கப்படும் போது நாமென்ன செய்ய முடியும் எனும் இயலாமையும், விரக்தியும் மேலோங்குகின்றன. இதற்கு எதிராக அந்த வீர வரலாற்றை நமக்கு அறிமுகப்படுத்தும் நூலாக இந் நூல் திகழ்கிறது.

இஸ்லாமியர்கள் என்றால் அவர்களுக்கும் கம்யூனிசத்துக்கும் வெகுதூரம் என்பதாக இங்கே ஒரு பிம்பம் வலுவந்தமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் இஸ்லாமியர்கள் அன்றிலிருந்து இன்றுவரை கம்யூனிசத்துடன் நெருங்கிய பிணைப்பை கைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இலங்கை மலையக வெகுஜன இயக்கத்தைச் சேர்ந்த பி.ஏ. காதர் அவர்களின் இந்நூல் பொருத்தமான சான்று.

நூலிலிருந்து .. .. ..

மேதினம் இன்று பலராலும் பலவிதமாக வெவ்வேறு நோக்குடன் கொண்டாடப்படுகிறது. ஏன் அரசாங்கம் கூட காலி முகத் திடலிலே வெளிநாடுகளிலிருந்து பிரசித்தி பெற்ற நடிக நடிகைகளையும் பாடகர்களையும் இறக்குமதி செய்து களியாட்ட விளாக்களுடன் மேதினத்தை ஆரவாரத்தோடு கொண்டாடுகிறது. மொத்தத்தில் இன்று மேதினத்தின் உட்பொருளும், வர்க்கத்தன்மையும் ஒழிக்கப்பட்டு ஒரு தீபாவளி பண்டிகையைப் போன்றோ அல்லது உல்லாசப் பொழுதுபோக்கும் ஒரு ஓய்வு தினமாகவோ மாற்றப்பட்டு விட்டது.

ஆனால் மேதினம் என்பது ஒரு பண்டிகை அல்ல. களியாட்ட விழா அல்ல. தொழிலாளர்கல் ஓய்வு கொள்ளும் விடுமுறை தினமும் அல்ல. மாறாக, உலகெங்கிலுமுள்ள வீரத் தொழிலாளர்கள் சகல வேறுபாடுகளையும் ஒதுக்கிவிட்டு, வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு,  ஒரே குரலில் தம் லட்சியத்தை பிரகடனப்படுத்தும் நாள். சுரண்டும் வர்க்கத்துக்கு எதிராக சுரண்டப்படும் வர்க்கம் கடந்த காலங்களின் தான் ஆற்றிய வீரப் போராட்டங்களை நினைவுபடுத்தி எதிர்கால போராட்டங்களுக்கு விண்ணை அதிரவைக்கும் வீர சபதம் செய்யும் நாள். ஆளும் வர்க்கத்தின் மீது தனக்குள்ள கடனை தீர்ப்பதற்கு உலகத் தொழிலாள வர்க்கம் தனது ஒத்திகையை ஒத்திகை பார்க்கும் ஒப்பற்ற திருநாள்

இந்த மகத்தான நாளில் உலகெங்கிலுமுள்ள தொழிலாளி வர்க்கம் குறைவான வேலை நேரத்துக்காக தான் பல பத்தாண்டுகள் ஏன் நூற்றாண்டுகளாய் நடத்திய போராட்டங்களையும், ஆற்றிய தியாகங்களையும் சிந்திய ரத்தத்தையும் நினைவுகூர்கிறது. கடந்தகால படிப்பினைகளிலிருந்து எதிர்கால திட்டங்களை சரிபார்த்துக் கொள்கிறது. தனதும் உலக மக்களினதும் விடுதலைக்குப் பாதை சமைக்கிறது.

ஆம். மேதினம் ஒரு தற்செயலான சம்பவத்தால் பிறந்ததல்ல. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை வரையறுப்பதற்காக நடத்திய இடைவிடாத போராட்டத்தின் உச்சகட்டமே மேதினம். அந்த வரலாற்றை அப்படியே முழுமையாக வடித்தால் அதுவே ஒரு வீர காவியம் ஆகிவிடும்.

SHARE