மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை குவித்துள்ளது.

734
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை குவித்துள்ளது.மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 399 ஓட்டங்களை குவித்தது.

இதில் இயன் பெல் (143) அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஜோ ரூட் 83 ஓட்டங்களையும், பென் ஸ்ட்ரோக் 79 ஓட்டங்களையும் குவித்தனர்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில், ரோச் 4, டெய்லர் 3, ஹோல்டர் 2, சாமுயில்ஸ் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 295 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்த அணியின் பிளாக்வுட் (112) பதிலடியாக சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில், ட்ராட்வெல் 4, ஆண்டர்சன், பிராட் தலா 2, ஜொர்டன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 104 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 3வது ஆட்டநாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்கள் குவித்துள்ளது.

குக் (13), டிரோட் (4), பெல் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து பேலன்ஸ் (44), ஜோ ரூட் (32) விளையாடி வருகின்றனர். தற்போது இங்கிலாந்து 220 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.

SHARE