மேற்கிந்திய தீவுகளை வயிற்றுக் கோளாறுடன் புரட்டியெடுத்த டிவில்லியர்ஸ்

369
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முந்தைய நாள், தான் வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்டதாக தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 30வது ஓவரில் களமிறங்கிய டிவில்லியர்ஸ் சரவெடி ஆட்டம் காட்டினார். இதன் காரணமாக 50 ஓவரும் விளையாடி 162 ஓட்டங்கள் விளாசித் தள்ளி சாதனை படைத்தார்.இது குறித்து தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறுகையில், இன்றைய ஆட்டத்தை மிகவும் ரசித்து, அனுபவித்து விளையாடினேன். எனக்கு முன்பாக ஆடியவர்கள் வலுவான அடித்தளம் அமைத்ததால் என்னால் நெருக்கடியின்றி விளையாட முடிந்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பெரிய சதம் அடித்தது ஆச்சரியம் தான். நான் நினைத்த மாதிரி எல்லாம் சாதகமாக இருந்து. கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முந்தைய நாள் இரவில் வயிற்று கோளாறால் மிகவும் அவதிப்பட்டதாகவும், காலையில் மருத்துவர் ஊசிபோட்ட பிறகே ஓரளவு சரியானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE