மைதானத்தை விட்டு பறந்த கெய்லின் சிக்சர்: நதியில் குதித்து பந்தை மீட்ட ரசிகர்

354
இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அடித்த ஒரு சிக்சர் மைதானத்தை தாண்டி வெளியில் உள்ள ஒரு நதியில் விழுந்தது.பந்து ஆற்றில் போய் விழுந்ததை பார்த்த மார்ட்டின் புல்லாக் என்ற ரசிகர், கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஆற்றில் குதித்து அந்த பந்தை மீட்டு கெய்லிடம் கொடுத்தார்.

ஆற்றில் நீச்சலடித்து பந்தை எடுத்த ரசிகரை பாராட்டிய கெய்ல் அந்த பந்தில் தனது கையொப்பமிட்டு அவருக்கு வழங்கினார்.

மேலும் மார்ட்டின் புல்லாக் குடும்பத்தினருடனும் கெய்ல் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

கடந்த ஞாயிறன்று டவுன்டன் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் கென்ட் அணிக்கு எதிராக கெயில் 62 பந்துகளில் 151 ஓட்டங்கள் எடுத்தார். இந்த போட்டியின் போது கெயில் 15 சிக்சர்களை விளாசினார்.

முதலில் விளையாடிய கென்ட் அணி 227 ஓட்டங்களை குவித்தது. கெயில் அதிரடியாக விளையாடியும் இந்த போட்டியில் சோமர்செட் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

கென்ட் அணி 224 ஓட்டங்கள் எடுத்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE