காணாமல் போன எனது மகள் மைத்திரியுடன் இருப்பதை பார்த்தேன்: மனதுருகும் தாய்

315

 

 

எனது மகளை இராணுவ உடையில் வந்தவர்கள் தான் பிடித்து சென்றனர். காசிப்பிள்ளை ஜெரோனியின் தாயார் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.

12417537_1047160585345946_6495260833422076275_n 12932561_1047160608679277_1746486904232080746_n

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

அவர் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில்,

நாங்கள் 2009 ஆம் ஆண்டு நடந்த சேல் தாக்குதல் காரணமாக இரட்டைவாய்க்கால், புதுமாத்தன் பகுதிக்கு இடம்பெயர்ந்த சமயத்தில் எனது கணவரை 2009.03.03 விடுதலைப்புலிகள் பணிவேலைக்காக அழைத்துச் சென்றனர்.

அதன் பின் கடுமையான செல்த்தாக்குதல் காரணமாக எனது பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்தோம். அதன் போது எனது மூத்தமகள் காசிப்பிள்ளை ஜெரோமி ( 19வயது) யை இராணுவ உடையுடன் வந்தவர்கள் பிடித்தனர்.

நான் எவ்வளவே அழுதேன் ஆனால் எனது மகளை அழைத்து சென்று விட்டனர். எனது மகளை பிரிந்து வாடினேன். எனது மகளை தேடிய படியே திரிந்தேன். விடுதலைப்புளிகளினால் பிடித்துச்செல்லப்பட்ட எனது கணவர் பணிவேலைக்கு அவரை விட்டபோது அங்கிருந்து தப்பித்து வந்து எம்மை தேடி பிடித்து எம்முடன் வந்தார். 2009.04மாதம் வெள்ள முள்ளிவாய்க்காலுக்கு வந்தோம் 2009.05.16 இராணுவம் எம்மை முகாமிக்கு வருமாறு வட்புறுத்தினர். எனது மகள் இல்லாமல் நான் வர மாட்டேன் என தெரிவித்தேன்.

அதன் பின் வட்புறுத்தல் காரணமாக எம்மை அழைத்துச் சென்று செட்டிக்குளம் இராமநாதன் முகாமில் அடைத்தனர். 2009.12.25 கனகராயன் குளம் பாடசாலை முகாமிற்கு எம்மை இடமாற்றி 2010.01.15ஆம் திகதி எம்மை எமது இடத்திற்கு விட்டனர். எனது மகளை காணவில்லை என தினமும் அழுது கொண்டிருந்தேன்.

2015.01.07 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது எனது மகன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவுடன் இருந்த தேர்தல் பிரச்சார துண்டினை காண்டேன். எனது மகள் ஜனாதிபதியுடன் இருக்கும் புகைப்படம்.

உடனே தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அறிவித்தேன். 3ஆம் மாடிக்கும் என்னை அழைத்தனர். 8மணித்தியாலங்களுக்கு மேல் என்னிடம் விசாரனை மேற்கொண்டனர்.

நான் ஒன்று தான் தெரிவித்தேன் அது எனது மகள் தான் என .என்னும் எனது மகள் கிடைக்கவில்லை . எனது மகள் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கின்றாள் என்ற போதும் எனது மகள் எங்கே? இறுதியாக உங்களிடம் வந்துள்ளேன் என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்

SHARE