மைத்திரி- ரணில் – கோத்தா சந்திப்பு! தீட்டப்பட்ட திட்டம் என்ன?

261

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. ஜனாதிபதியின் புதல்வர் டட்லி சிறிசேனவின் புதல்வரது திருமண நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்றது. இதன் போதே மூவரும் சந்தித்துள்ளனர்.

மூன்று பேரும் ஒரு மேசையில் அமர்ந்து சுமார் 20 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட இவர்களை இணக்கத்திற்கு கொண்டு வரும் அனுசரணையாளராக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு சீன நிறுவனம் ஒன்றும் பங்களிப்பு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE