மோகன் லாலை போல் நடித்துக் காட்டிய கிறிஸ் கெய்ல்

294

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல், மலையாள நடிகர் மோகன் லாலை போன்று பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் நரசிம்ஹம் என்ற படத்தில் பேசிய பிரபல வசனமான ’நீ போ மோனே தினேஷா’ என்ற வசனத்தை கிறிஸ் கெயில் பேசி உள்ளார்.

துபாயில் உள்ள ஒரு தனியார் எப்.எம் ரேடியோவில் பதிவு செய்யபட்ட இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

கேரள கிரிக்கெட் லீக் அணியின் விளம்பர தூதராக கிறிஸ் கெய்ல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE