மோசமான ஆட்டம்: கவுண்டிப் போட்டியில் இருந்து கழற்றிவிடப்பட்ட டில்ஷான்

368
இங்கிலாந்தின் கவுண்டி அணியான டெர்பைஷெயர் அணியில் இருந்து இலங்கையின் முன்னணி வீரரான டில்ஷான் கழற்றிவிடப்பட்டுள்ளார்.38 வயதான இலங்கையின் அதிரடி ஆட்டக்காரரான டில்ஷான் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டெர்பைஷெயர் அணிக்காக விளையாடி வந்தார்.இந்நிலையில் கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது நீக்கம் அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று அந்த அணியின் இயக்குனர் கிராமி வெல்ட்ச் தெரிவித்துள்ளார்.

டில்ஷானின் மோசமான ஆட்டத்தால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெர்பைஷெயர் அணியுடனான ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து டில்ஷான் நாடு திரும்பியுள்ளார்.

அவர், சாம்பியன்ஷிப் போட்டியில் 6 இன்னிங்சிகளில் 69 ஓட்டங்களே எடுத்துள்ளார். அதே போல் நாட்வெஸ்ட் போட்டியில் ஒரே ஒரு அரைசதம் மற்றும் 3 றொயல் லண்டன் கிண்ணப் போட்டியில் சராசரியாக 8.66 மட்டுமே வைத்திருந்தார்.

SHARE