யுவராசுக்கு டபுள் ட்ரீட்! சந்தோஷமான தருணம்

280

 

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங் தன்னுடைய திருமணம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங், பாலிவுட் நடிகை ஹசல் கீச்சை காதலித்தார்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டவே, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 2015ம் ஆண்டு நடந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு விளையாட்டு போட்டிகளில் யுவராஜ் சிங் பிஸியானார்.

தொடர்ந்து இருவரும் தங்களது திருமணம் பற்றி வாய்திறக்காமல் இருந்த நிலையில், யுவராஜ் வருகிற டிசம்பரில் திருமணம் நடைபெறும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

டிசம்பர் 12ம் திகதி தான் யுவராஜ் சிங்-கின் பிறந்தநாள், அன்றைய தினமே நடைபெற்றால் யுவராசுக்கு ஸ்பெஷல் ட்ரீட் தான்.

துபாயில் உறவினர்கள், நண்பர்கள் சூழ பஞ்சாப் ஸ்டைலில் திருமணம் நடைபெறும் என்றும், இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

SHARE