சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ரசிகர்கள், நடன அழகிகளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.ராஞ்சியில் நடந்த போட்டியில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, சென்னை அணிக்கு 149 ஓட்டங்கள் இலக்காக வைத்தது.இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி கடைசி ஓவரில் போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி வெற்றிக்கான ஓட்டங்களை அடித்த நேரத்தில், ரசிகர்கள் சிலர் திடீரென கேலரியின் அருகில் நின்ற சியர் லீடர்ஸ் என்று அழைக்கப்படும் நடன அழகிகளை நோக்கி தண்ணீர் பாட்டல்கள் மற்றும் சிறு சிறு பொருட்களை தூக்கி வீசினர். இதனால் பயத்தில் உறைந்து போன அழகிகள் பாதுகாப்பான இடத்திற்கு ஓடி தஞ்சம் அடைந்தனர். |