ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொடரும் சர்ச்சை 

273
ஜேர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்துக்கு காரணம் இயந்திர கோளாறா அல்லது மனித தவறா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் நேற்று ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 60க்கும் மேற்பட்டோர்  லேசான காயமடைந்துள்ளனர். தண்டவாளத்தின் வளைவில் எதிரில் வந்த ரயிலை மற்றொரு ரயில் பார்க்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சிக்னலில் கோளாறு ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஒரே தண்டவாளத்தில் எவ்வாறு இரண்டு ரயில்கள் வந்தன என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

பொதுவாக சிவப்பு விளக்கு எறியும் நேரத்தில் ரயில்கள் சென்றால் தானாவே ரயில் நிற்கும் வகையில் ஆட்டோமெட்டிக் ப்ரேக் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்த விபத்தின்போது ஆட்டோமெட்டிக் பிரேக் வசதி அனைத்து வைத்துப்பட்டிருந்துள்ளது. இதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த தகவலை பொலிசார் மறுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE