ரூ.10 லட்சத்தில் சிறந்த Mileage தரும் கார்கள்.., Maruti முதல் Tata வரை!

169

 

இந்தியாவில் ரூ.10 லட்சம் விலையில் சிறந்த Mileage கொடுக்கும் கார்கள் மொடல்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Maruti Suzuki WagonR
மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) என்பது இந்தியாவில் காணப்படும் Hatchback model ஆகும். இதன் விலையானது ரூ.5.52 லட்சம் முதல் ரூ.7.38 லட்சம் (Ex-showroom) வரை விற்பனையில் கிடைக்கிறது.

இந்த காரானது Petrol engine மற்றும் manual transmission மூலம் 25.19 கிமீ/லி Mileage வழங்குகிறது. அதேபோல, Automatic transmission கொண்ட பெட்ரோல் engine லிட்டருக்கு 24.43 கிமீ Mileage வழங்குகிறது.

Maruti Suzuki Dzire
மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) என்பது இந்தியாவில் கிடைக்கும் Compact sedan மொடல் ஆகும்.

இதன் விலையானது ரூ.6.57 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் (Ex-showroom) வரை விற்பனையில் கிடைக்கிறது. இது பெட்ரோல் எஞ்சினுடன் 26 கிமீ/லி Mileage கொடுக்கிறது.

Hyundai I20
ஹூண்டாய் i20 (Hyundai i20) என்பது இந்தியாவில் கிடைக்கும் Hatchback model ஆகும். இதன் விலையானது ரூ.7.04 லட்சத்தில் இருந்து ரூ.11.21 லட்சம் (Ex-showroom) வரை விற்பனையில் கிடைக்கிறது.

இது இரண்டு Powertrain கட்டமைப்புகள் மற்றும் Petrol Engine மற்றும் Diesel Engine என இரு வேரியண்டுகளில் கிடைக்கிறது.பெட்ரோல் எஞ்சின் 20 கிமீ/லி Mileage, டீசல் இன்ஜின் 21 கிமீ/லி Mileage வழங்குகிறது.

Tata Altroz
டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) என்பது இந்தியாவில் கிடைக்கும் Hatchback model ஆகும். இதன் விலையானது ரூ.6.65 லட்சம் முதல் ரூ.10.80 லட்சம் (Ex-showroom) வரை விற்பனையில் கிடைக்கிறது.

இந்த காரானது etrol Engine மற்றும் Diesel Engine என இரு வேரியண்டுகளில் கிடைக்கிறது.பெட்ரோல் எஞ்சின் 18.05 கிமீ/லி எரிபொருள் செயல்திறனையும் , டீசல் இன்ஜின் 23.64 கிமீ/லி Mileage எரிபொருள் செயல்திறனையும் வழங்குகிறது.

Maruti Suzuki Baleno
மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) இந்தியாவில் கிடைக்கும் Hatchback model ஆகும். அதன் விலை ரூ.6.66 லட்சத்தில் தொடங்கி ரூ.9.88 லட்சம் (Ex-showroom) வரை கிடைக்கிறது. இது பெட்ரோல் எஞ்சினுடன் 22.9 கிமீ/லி மைலேஜை கொடுக்கிறது.

SHARE