லீட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி திணறல்

374

இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன் எடுத்து இருந்தது. நேற்று 2–ம் நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி 350 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. ரோஞ்சி 88 ரன் எடுத்தார்.

முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக், ஆடம் லைத் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். முதல் விக்கெட்டுக்கு 177 ரன் சேர்த்தனர். குக் 75 ரன்னில் அவுட் ஆனார். லைத் தனது முதல் சதத்தை அடித்தார். அவர் 107 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் விக்கெட்டுகள் சரிந்தது. பேலன்ஸ் (29 ரன்), ஜோ ரூட் (1 ரன்), ஸ்டோகிஸ் (6ரன்) அடுத்தடுத்து வெளியேறினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்து இருந்தது. இயன்பெல் 29 ரன்னுடனும், பட்லர் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

கேப்டன் குக் 33 ரன்னை எடுத்த போது இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன் வீரர் என்ற சாதனையை படைத்தார்

SHARE