வங்காலை புகையிரத வீதிக்கடவையில் ஏற்பட இருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது

296

 

வங்காலை புகையிரத வீதிக்கடவையில் ஏற்பட இருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது
 
unnamed (10)
சிலாபத்துறை வைத்தியசாலையில் இருந்து வங்காலையூடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கர்ப்பிணித்தாய் ஒருவரை ஏற்றிக்கொண்டு அவசரமாக சென்ற அம்புலன்ஸ் வண்டி வங்காலை புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தும் சம்பவம் மயிரிழையில் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
சிலாபத்துறை வைத்திய சாலையில் இருந்து நேற்று(24) புதன் கிழமை மாலை கர்ப்பிணித் தாய் ஒருவரை ஏற்றிக்கொண்டு அம்புலன்ஸ் வண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நோக்கி பயணித்தது.
குறித்த அம்புலன்ஸ் வாகனத்தில் அம்புலன்ஸ் சரதி மற்றும் இரண்டு மருத்துவ மாதுக்கள் ஆகியோர் கர்ப்பிணித்தாயுடன் பயணித்துள்ளனர்.
இதன் போது வேகமாக வந்த அம்புலன்ஸ் வண்டியை சாரதி வங்காலை புகையிரத கடவைக்கு சற்று முன்பு வைத்து திடீர் என  நிறுத்தியுள்ளார்.
இதனால் அம்புலன்ஸ் வண்டியில் பயணித்த அனைவரும் நிலை தடுமாறியுள்ளனர்.
சிறிது வினாடியில் குறித்த வீதியூடாக தலைமன்னாரை நேக்கி புகையிரதம் செல்ல ஆரம்பித்துள்ளது.
குறித்த வங்காலை புகையிரத வீதிக்கடவையில் கடமையில் இருந்த காவலாளி உரிய நேரத்திற்கு கடமைக்கு சமூகமளிக்காமல்,புகையிரதம் வரும் போது மோட்டார் சைக்கிலில் அவசர அவசரமாக வந்து ஒரு சில வினாடிகளில் புகையிரத பாதைக்கான வீதி தடையை போட்டுள்ளார்.
அம்புலான்ஸ் வண்டி சாரதியின் கவனத்தினால் குறித்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதோடு,பெறுப்பற்ற விதத்தில் குறித்த வங்காலை வீதி கடவையில் காவல் கடமையில் ஈடுபட்ட காவலாளியின் செயற்பாட்டை பலரும் கண்டித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் எவ்வித விபத்துக்களும் ஏற்படாத வகையிலும்,உரிய நேரத்திற்கு புகையிரத கடவைகளுக்கு கடமைக்கு வராத புகையிரத கடவை காவலாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE