வடக்கில் பௌத்த தலங்களாக மாறும் படைத்தளங்கள்

300

 

putharவடபகுதியில் போர்முடிந்து பல வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அரசியல் தீர்வும், அபிவிருத்திச் செயற்பாடுகளும், அல்லது சொல்லியவாறு இராணுவமுகாம் அகற்றப்பட்டு இராணுவ குறைப்புகள் செய்யப்பட்டதோ இல்லையோ, பௌத்த தல விஸ்தரிப்பும் பௌத்த அடையாளங்களும் வேண்டிய அளவிலும், துரிதமாகவும் வடபகுதி முழுவதிலும் திட்டமிட்ட முறையில் முனைப்புடன் விருத்திபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

உச்சக்கட்டமாக நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுமென வடக்கு ஆளுநரின் வீறாப்பு பேச்சு வரையிலும் பௌத்த விஸ்தரிப்பு இன்று சென்றிருக்கிறது.

இவர்களுக்கு எல்லாம் மக்கள் மாலை போட்டது எதற்கு ?

dcp287676767676-2 maxresdefault sampanthan

வடபகுதி முழுவதும் பரந்துள்ள இராணுவத்தளங்களை பார்க்கின்ற போது அவை படைத்தளங்கள் தானா? அல்லது பௌத்த தலங்கள் தானா? என ஜயுறுமளவிற்கு படைத்தளங்களின் உருவமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

படைத்தளமுன்றலிலே அரசமரம் உள்ளிட்ட பௌத்தவிகாரைகள், தூபிகள், மற்றும் புத்தர் சிலைகள் மிக கச்சிதமாகவும் கவர்ச்சிகரமாகவும் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்றன. யுத்தம் முடிவுற்ற பின்னர் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்ட பௌத்த சின்னங்களை அவதானிக்கும் போது தேசிய பாதுகாப்பு என்ற நிலையிலிருந்து மாறி பௌத்த மத விசாலிப்புக்கே படைத்தரப்பு இப்பகுதியில் நிலைபெற்றுள்;ளது போலத்தோன்றுகின்றது.

போதாக்குறைக்கு இன்று தற்கொலைக்குண்;டுதாரியின் ஆடைகள், மற்றும் போர்த்தளபாடங்கள் ஒரே நாளில் புதுசு புதுசாக பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறான ஒரு நிலை வடக்கின் படைக்குறைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்து மென இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திவெளியிட்டிருக்கின்றது.

புதிய அரசு அமைந்ததும் படைக்குறைப்பு செய்யப்படும் முகாம்கள் அகற்றப்பட்டு அங்கிருந்து துரத்தப்பட்டு அகதிமுகாம்களில் அவல வாழ்வு வாழும் மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் என்றெல்லாம் ‘நல்லாட்சி’ தலைவர்கள் தேர்தல் காலங்களில் தொண்டை கிழிய கத்திச் சென்றனர்.

ஆயினும் அலுவல் முடிந்ததும் வழமையான தமது போக்கிரித்தனத்தை சிங்களத்தரப்பு அரசியல்வாதிகள்; காட்டத்தலைப்பட்டுள்ளனர். திடீர் திடீரென யாழ் குடாநாடு விஜயம் செய்யும் அரசுத்தலைவர் வலி வடக்கில் மக்கள் மீளக்குடியமர ஆவன செய்யப்படுமென உறுதிகூறிச் சென்றாலும் இன்னும் நாற்பதாயி;ரத்திற்கும் அதிகமான ஏக்கர்நிலங்களும் முக்கிய கடல்த்தளங்களும் படைத்தரப்பினரிடமே உள்ளன. பலாலி விமானத்தள விஸ்தரிப்பு என்ற போர்வையில் வளமிக்க வலிவடக்கை கபளிகரம் செய்யும் முடிவிலேயே இவ்வரசு குறியாகவுள்ளது போலப்படுகிறது. நல்லாட்சிக்கு இது அழகல்ல.
போர்முடிவுற்று 6வருடங்கள் கழிகின்ற நிலையில் அரசியல் தீர்வும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என்ற நிலை வடக்கில் தொடர்கின்றது.

மாகாணசபைகளுக்குரிய காணி அதிகாரமும் இல்லை பொலிஸ் அதிகாரமும் கிடையாது எனக்கூறி காணிகளைச்சுவீகரித்து அதில் பௌத்த வாடை வீசும் தலங்களை அமைத்தும் ஊர்ஊராக பொலிஸ் நிலையங்களைத்திறந்து சிங்கள இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பை வழங்குவதும் முறைப்பாடுகளை சிங்கள மொழியிலேயே நடைமுறைப்படுத்துவதும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை பௌத்தத்தை வலிந்து வடக்கில் திணிப்பதற்கான அடையாளங்களாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

காடுகள் முழுவதும் காலாற்படைகள், கடற்கரையோரங்கள் எங்கும் கடற்படைகள், கிராமங்கள்தோறும் பொலிஸ் நிலையங்கள் பரந்துகிடக்கின்றன. ஆயினும் மரக்கடத்தலும், மண்கொள்ளையும் கசிப்பு உற்பத்தியும் வடக்கில் குறைந்த பாடில்லை. கஞ்சாக்கடத்தல் இன்னொரு புறமும் பாலியல் வல்லுறவுகள் வாள்வெட்டுக்களும், வீடுபுகுந்து மேற்கொள்ளும் திருட்டுச்சம்பவங்களுமே வடக்கில் இன்று எஞ்சியுள்ளன போல் தெரிகிறது.

யுத்தம் முடிந்தாலும் இராணுவப்பிடிக்குள் சிக்கியுள்ள வடபகுதி ஒரு புறம் சிங்கள பௌத்த பூமியாக மாற்றம் பெற்று வருவதையும், இப்பகுதிமக்களின் நல்வாழ்வும் கலாச்சாரமும் பாரம்பரியமும் சிதைவடைந்து சின்னாபின்னமாகி இன்னொரு கட்புலனாகா யுத்தத்திற்குள் சிக்கித்திணறுவதையுமே காணமுடிகிறது. இன்னிலை தொடருமாயின் இன்னும் சில தசாப்தங்களில் ஒவ்வொரு முற்றத்திலும் ‘பிரித்’ ஓத வேண்டியதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது போகலாம்.

வடக்கில் மாகாணசபை அமர்வில் காட்டுக் கூச்சலும் குழப்பமும் தவிர கண்டது ஒன்றுமில்லை. த.தே.கூட்டமைப்பினருக்கு கொழும்பிலிருந்து சொந்தப் பகுதிக்கு திரும்ப நேரமில்லை பாவம். இனி அவர்களை அடுத்த தேர்தலின் போதே தேர்தல் மேடைகளில் காணலாம்.

SHARE