வடக்கு, கிழக்கில் 67,000 ஏக்கர் நிலம் இன்னும் விடு­விக்­கப்­ப­டா­ம­லேயே இரா­ணுவக் கட்­டுப்­பாட்டில் உள்­ளது

536

 
இலங்கை சுதந்­திரம் அடைந்­ததன் பின்­ன­ரான வர­லாற்றில் இது­போன்ற பல ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்­டன. மக்கள் கருத்­த­றியும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­ன­தாக அமைக்­கப்­பட்ட காணாமல் போனோர் தொடர்­பாக மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மையில் அமைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவும் அதன் பரிந்­து­ரைகள் உள்­ளடங்­கிய அறிக்­கையை சமர்ப்­பித்­துள்­ளது. அதற்கு முன்­ன­தாக கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு நிறு­வப்­பட்டு அக்­கு­ழுவும் தனது பரிந்­து­ரைகள் அடங்­கிய பூரண அறிக்­கையை சமர்ப்­பித்­துள்­ளது.

anaikulu_vavuniya

இவை அனைத்தும் 2009இற்குப் பின்­ன­ரான காலப்­ப­குதியில் அமைக்­கப்­பட்­ட­வை­யாக இருப்­ப­தோடு பரிந்­து­ரைகள் வழங்­கப்­பட்ட பின்­னரும் நிலை­மைகள் எவ்­வா­றி­ருக்­கின்­றன என்ற அனு­ப­வத்தை வழங்­கிக்­கொண்டு எம் ­முன்னால் உள்­ளன. ஒரு விடயம் சார்­பாக அர­சாங்கமே ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கின்­றது. மக்­களின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் ஆணைக்­குழு முன்னால் மக்கள் கூறு­கின்ற கருத்­துக்­களும், அவற்றின் அடிப்­ப­டையில் ஆணைக்­குழு ஆராய்ந்­த­றிந்து இறுதி செய்த பரிந்­து­ரை­களும் அரசால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும்
.
2009இல் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் ஏன் யுத்தம் நடை­பெற்­றது என்­ப­தற்­கான ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. முத­லா­வ­தாக ஜன­நாயக ரீதி­யி­லான போராட்­ட­மா­க­வி­ருந்­தாலும் சரி, ஆயுத ரீதி­யி­லான போராட்­ட­மா­க­வி­ருந்­தாலும் சரி பல்­லின நாட்டில் போராட்டம் ஒன்று ஏற்­ப­டு­வ­தற்­கான ஆணிவேர் எது என்­ப­தனை சிங்­க­ளத்­த­ரப்பு சரி­யாகப் புரிந்து கொண்­டி­ருக்­கின்­றதா என்­பதை தற்­போது வரையில் விளங்கிக் கொள்ள முடி­ய­வில்லை.

இவ்­வாறு புரி­யாத புதி­ராக நிலைமை இருக்­கையில் இலங்­கையின் தேசிய இன­மாக தமிழ் மக்­களை அங்­கீ­க­ரித்து அவர்­களின் அர­சியல், பொரு­ளா­தார, சமுக அபி­லா­ஷை­களை அங்­கீ­க­ரித்து தமிழ்­மக்­களின் இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு எவ்­வாறு எடுக்­கப்­படும் என்­பது பிர­தான ஐயப்­பா­டாக இருக்­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­
பக் ஷ தலை­மை­யி­லான அர­சினால் சொல்­லொணாத் துன்­பங்­களை அனு­ப­வித்த தமிழ்­மக்கள் அதற்கு மாற்­றாக தமிழ்­மக்­க­ளுக்கு நன்மை பயக்­கக்­கூ­டிய, தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணக்­கூ­டிய அரசும், அர­சுத்­த­லை­வரும் வேண்டும் என்னும் நோக்கில் இன்­றுள்ள ஜன­ாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தலை­மை­யி­லான அணியை ஆத­ரித்து வாக்­க­ளித்­தனர். ஆட்­சிக்கு வந்­த­பின்னர் இந் நல்­லாட்சி அர­சினர் தமிழ்­மக்­க­ளுக்­கான எந்­த­வொரு நல்ல சமிக்­ஞை­க­ளையும் காட்ட­வில்லை. நிலை­மைகள் அவ்­வாறே தான் இருக்­கின்­றன. ஆனால் கண்­து­டைப்­புக்­காக மாறாக கடந்த அரசின் சில செயற்­றிட்­டங்­க­ளையும் வேலைத்­திட்­டங்­க­ளையும் நிறைவு செய்­து­கொண்­டி­ரு­கின்­றனர்.

வடக்கு, கிழக்கில் அர­ச­கா­ணி­களும் தனியார் காணி­களும் கட்­ட­டங்­க­ளு­மாக சுமார் 67 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் விடு­விக்­கப்­ப­டா­ம­லேயே இரா­ணுவக் கட்­டுப்­பாட்டில் உள்­ளது. வடக்கு, கிழக்கு பிர­தே­சத்தில் சிங்­க­ளக்­கு­டி­யேற்றம் தொடர்ந்­த­வண்­ணமே உள்­ளது. அர­ச­கா­ணி­களில் சிங்­கள மக்­களை அரசு தனது நல்­லா­சியில், பாது­காப்­புடன் குடி­யேற்றி வரு­கி­றது. அண்­மையில் கொக்­கச்­சான்­குளம் என்ற கிராமம் கலா­பொ­பஸ்­பெவே 1, கலா­பொ­பஸ்­பெவே 2, நாமல்­கம என்று மூன்­று­ கி­ரா­மங்­க­ளாக பெயர் மாற்­றப்­பட்டு 3000க்கு மேற்­பட்ட சிங்­கள மக்கள் அங்கு அர­சினால் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். வவு­னியா, கொக்­குவெளியில் தமிழ் மக்­க­ளுக்­கு­ரிய காணிகள் இரா­ணு­வத்தால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு வரு­வ­துடன் குளப்­ப­கு­தியும் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றது.

கொக்­குவெளி என்­பது சிங்­க­ளத்தில் கொக்­கெ­லிய என்று பெயர் மாற்­றப்­பட்டு வரு­கின்­றது. தமி­ழர்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்டு இரா­ணுவ முகாம் ஆக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தச்­ச­னாங்­கு­ளத்தில் தமிழ் மக்­களின் காணிகள் தற்­போது ஆக்­கி­ர­மிக்­கப்­படு­கின்­றது. கட்­டடம் ஒன்று கட்­டப்­ப­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
வவு­னியா இறம்­பைக்­குளம் மகளிர் கல்­லூ­ரிக்கு மைதானம் அமைப்­ப­தற்­காக கோரப்­பட்ட காணி மற்றும் இறம்­பைக்­குளம் மயானம் என்­பன தற்­போதும் வான்­ப­டை­யி­னரின் கட்­டுப்­பாட்­டி­லேயே உள்­ளது. மத கிரி­யை­களை கூட சுதந்­தி­ர­மாக செய்ய முடி­யாத வகையில் உள்­ளது. வான்­ப­டை­யி­ன­ரிடம் அனு­மதி பெற்றே சட­லங்­களை கூட எரிக்­கவும் தாட்­கவும் வேண்­டி­யுள்­ளது. இப்­ப­குதி முற்­றாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கொக்­க­டிவான் குளத்­திற்கு அருகில் விவ­சாயம் செய்யக் கூடிய வகையில் விவ­சாய அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்தால் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்ட இரு­நூறு ஏக்கர் வயல் நிலத்தை அங்­கி­ருந்த தமிழ்க் குடும்­பங்­களை விரட்­டி­விட்டு 165 சிங்­கள குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
சிங்­கள மக்கள் வசிக்­காத வடக்கு, கிழக்கு பிர­தே­சங்­களில் பௌத்த விகா­ரை­களும் புத்தர் சிலை­களும் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. நயி­னா­தீவில் 67 அடி உய­ர­மான புத்­தர்­சிலை அமைக்­கப்­ப­டு­மென ஜனா­தி­ப­தியே அறி­வித்­துள்ளார். அதற்­கான அடித்­த­ளமும் இடப்­ப­டு­கின்­றது.
யாழ்.நகரின் நுழை­வா­யி­லான நாவற்­குழியில் சிங்­கள ராவய என்ற பெயரில் சிங்­களக் குடி­யி­ருப்பு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அண்மைக் காலத்­தி­லேயே இக்­கிரா­மத்­துக்கு சிங்­கள ராவய என்ற பெயர்ப்­பலகை பொறிக்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கள ராவய என்­பது புத்த பிக்­கு­களால் பௌத்த மதத்தை பரப்­பு­வ­தற்­காக வழி­ந­டத்­தப்­படும் கடும்­போக்­கான ஒரு அமைப்பு ஆகும். அப்­பெ­யரே இக்­கி­ரா­மத்­துக்கு சூட்­டப்­பட்­டுள்­ளது.

நாவற்­குழி புகை­யி­ரத நிலை­யத்தை அண்­டிய பிர­தேசம் அனைத்தும் சிங்­களக் குடி­யி­ருப்­பாக விரி­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சிங்­களக் குடி­யி­ருப்பில் பாட­சாலை, பௌத்த விகாரை போன்­றவை கட்­டு­வ­தற்கு அர­சாங்கம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. போர் நிறை­வுற்­றதும் 2010ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8ஆம் திகதி 193 சிங்­களக் குடும்­பங்கள் ஸ்ரீலங்கா இரா­ணு­வத்­தி­னரால் அழைத்­து­வ­ரப்­பட்டு அப்­போது கைவி­டப்­பட்­டி­ருந்த புகை­யி­ரத நிலைய பிர­தே­சத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டன.

குறித்த சிங்­களக் குடி­யேற்றவாசிகள் 1983 ஆம் ஆண்டு காலப்­ப­கு­திக்கு முன்னர் தாம் அப்­பி­ர­தே­சத்தில் வசித்து வந்­த­தாகக் கூறி­வ­ரு­கின்­றனர். ஜன­க­புர, சிங்­க­புர, 13ஆம் கொலனி என்று முல்­லைத்­தீவின் எல்­லையில் சில சிங்­களக் கிரா­மங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. முழுக்க முழுக்க சிங்­களப் பெயர்­ப­ல­கைகள் என்று சிங்­களக் கிரா­ம­மா­கவே மாறி­விட்­டது.

13ஆம் கொலனிப் பகு­தியை அண்டி இப்­பொ­ழுது புதி­தாக சிங்­களக் குடி­யேற்­றங்கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. அவை திரு­கோ­ண­ம­லையின் தென்­னை­ம­ர­வா­டியை நோக்கி நகர்­கின்­றன. சிறிய சிறிய மண் வீடுகள் தக­ரங்­களால் வேய்ந்­த­படி அமைத்துக் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 13ஆம் கொல­னியில் வலிந்து குடி­யேற்­றப்­பட்ட சிங்­கள மக்­களுக்கு போரால் பாதிக்­கப்­பட்ட மக்களுக்­கான வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­பட்டி­ருக்­கின்­றன. ஆனால் முப்­பது வருடப் போரால் இன வன்­மு­றையால் பாதிக்­கப்­பட்ட தென்­னை­மர­வாடி மக்கள் இன்­னமும் தற்­கா­லிக வீடு­க­ளில்தான் வசிக்­கின்­றனர்.

ஒதி­ம­லையை அண்­டிய வவு­னி­யாவின் எல்லைக் கிரா­மங்கள் கஜ­பா­கு­புர ஆக்­கப்­பட்­டுள்­ளன. சிலோன் தியேட்டர், டொலர்ஸ் பாம் என்­ப­னவும் சிங்­களக் குடி­யேற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்தப் பகு­தி­யி­லி­ருந்து ஒதி­ய­மலை பகு­தியை நோக்கி நாளும் பொழுதும் ஒரு வீடு என்ற வகையில் சிங்­களக் குடி­யேற்ற முன்­னேற்­றங்கள் நடந்து வரு­கின்­றன. வவு­னியா மாவட்­டத்தின் எல்லைப் புறம் முழு­வதும் சிங்­களக் குடி­யேற்­றங்­களால் சுற்றி வளைக்­கப்­ப­டு­கின்­றது. வவு­னி­யாவில் மன்னார் – மத­வாச்சி வீதியை அண்­டிய பகு­தி­க­ளிலும் இவ்­வாறு குடி­யேற்­றங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. மன்னார் முசலிப் பகு­தி­யிலும் சிங்­க­ளக்­கு­டி­யேற்றம் நடை­பெற்றுக் கொண்டு இருக்­கி­றது. திரு­மலை, அம்­பாறை முத­லிய மாவட்­டங்­களின் நிலைமை சிங்­களக் குடி­யேற்­றங்­களால் பெரும் மாற்­றத்­திற்கு உள்­ளாகி­விட்­டது. இவை­களில் பெரும்­பா­லா­னவை புதிய சிங்­களக் குடி­யேற்­றங்­க­ளாகும்.

வடக்கு, கிழக்கு பிர­தே­சங்­களில் உள்ள பௌத்த விகா­ரை­களில் தமிழ்­மக்­களால் இது­வரை எது­வித ஆக்­கி­ர­மிப்பும் நடை­பெற­வில்லை. ஆனால் இப்­போது தமிழ் ஆல­யங்­க­ளுக்கு பங்கம் விளை­விக்­கப்­பட்டு அந்த இடங்­களில் புத்­த­வி­கா­ரைகள் கட்­டப்­ப­டு­கின்­றன. அண்­மையில் கிளி­நொச்சி கன­காம்­பிகை ஆல­யத்தின் மூன்றாம் வீதியை ஆக்­கி­ர­மிக்கும் வகையில் சுவர் அமைக்­கப்­பட்டு பௌத்த விகாரை கட்­டப்­ப­டு­வது இதற்கு சான்­றாகும்.

இந்­ ந­ட­வ­டிக்­கைகள் தமிழ் மக்கள் பாரம்­ப­ரி­யமாக வாழ்ந்த பூமியில் அவர்­களின் தனித்­துவ அடை­யா­ளத்தை படிப்­ப­டி­யாக அழிக்கும் திட்­ட­மிட்ட இன­ அ­ழிப்பின் ஒரு­ப­கு­தி­யாக இரண்­ட­றக்­க­லத்தல் என்ற போர்­வையில் முன்­னெ­டுக்­கப்­படும் ஒரு பாரிய பௌத்த சிங்­கள மேல­திக்க திட்டம் என்­பதை நிரூ­பிக்­கின்­றன.

அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்­தினைப் பேசி­னா­லும்­கூட கடந்த காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் குறித்தும் தற்­போது மேற்­கொள்­ளப்­படும் ஆக்­கி­ர­மிப்­புக்கள் பற்­றியும் நியா­ய­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வில்லை. அதற்கும் மேலாக கடந்த அர­சாங்­கங்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்கள் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் காலத்தில் பலப்­ப­டுத்­தப்­பட்டும் வரு­கின்­றன.

இன நல்­லி­ணக்­கத்­தினைப் பாதிக்கும் நியா­யத்­திற்­குப்­ பு­றம்­பான சிங்­கள மய­மாக்­கத்தின் ஊக்­கி­யாக அரச அதி­காரம் காணப்­ப­டு­வதே பிரச்­சி­னை­யாகும். இந்த இடத்தில் அர­சாங்கம், திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் மற்றும் தற்­போதும் அதற்கு முன்­னரும் நடை­பெற்ற ஆக்­கி­ர­மிப்­புக்­க­ளுக்­கு­ரிய தீர்வை முன்­வைக்க வேண்டும் எனக்­கோ­ரு­வது நல்­லி­ணக்­கத்­திற்­கான தேவை­யா­க­வே­யுள்­ளது. அரசு தீர்வை முன்­வைக்கும் அதே வேளை இன விகி­தா­சா­ரத்­தினைப் பாதிக்கும் விட­யங்­களில் அது எவ்­வாறு செயற்­படப் போகின்­ற­தென்­பது பற்றி வெளிப்­ப­டுத்த வேண்­டி­யதும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

கடந்த 15 – 20 வரு­டங்­க­ளாக விசா­ரணை இன்றி அர­சியல் கைதிகள் சிறையில் வாடு­கின்­றனர். அர­சியல் கைதி­க­ளாக 180பேர் இன்னும் சிறைச்­சா­லை­களில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களை விடு­தலை செய்­வ­தாக பல தட­வைகள் அர­சாங்கம் தெரி­வித்­த­போதும் அது நடக்­க­வில்லை.
குமா­ர­புரம் படு­கொலை தொடர்­பாக கைது செய்­யப்­பட்ட இரா­ணு­வத்­தினர் அண்­மையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர். சட்­டமா அதிபர் திணைக்­களம் இவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்ற நிலையில் இவர்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆனால் கொலை­யா­ளிகள் யார் என்று இது­வரை அடை­யாளம் காண்­ப­தற்­கான எந்த சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் தமிழ் ஊழி­யர்­க­ளுக்­கான பற்­றாக்­குறை மிகப்­பெ­ரு­ம­ளவில் இருக்­கின்­ற­போது உயர்­அ­தி­கா­ரிகள் முதல் சாதா­ரண ஊழி­யர்­வரை சிங்­கள மக்­களே நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள். இது திட்­ட­மிட்ட ஒரு நட­வ­டிக்­கை­யாகும்.

காணா­மல்­போனோர் தொடர்­பான எமது பட்­டி­யலில் காணப்­ப­டா­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்று தெரி­யா­துள்­ளது. அவ்­வா­றா­ன­வர்­களில் பெரு­ம­ள­வானோர் உயி­ருடன் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் இல்­லை­யென்றே கரு­தப்­பட வேண்­டி­யுள்­ள­தென்­பதை மிகவும் கவ­லை­யுடன் கூறு­கின்றேன் என்று யாழில் நடை­பெற்ற தேசிய தைப் பொங்கல் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக­ க­லந்து­கொண்டு உரை­யாற்­று­கையில் பிர­தமர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்­காவில் பயங்­க­ர­வா­தத்தை மீண்டும் உரு­வாக்­கு­வ­தற்கு துணை இருந்து செயற்­பட்டார் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைதாகி, பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்­த­வரும், காணாமல் போனோர் தொடர்­பான போராட்­டங்­களில் கலந்து கொண்­ட­வ­ரு­மான பாலேந்­திரன் ஜெய­கு­மாரி பயங்­க­ர­வாத விசா­ரணை பிரிவில் இன்று (16.08.16) முன்­னி­லை­யா­கி­யுள்ளார்.

யாழ்ப்­பாணம் சாவ­கச்­சே­ரியில் நடை­பெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அமர்வின் போது புல­னாய்வு பிரி­வி­னரின் பிர­சன்னம் அதி­க­ளவில் காணப்­பட்­டுள்­ளது. காணாமல் போனோர் தொடர்­பான உண்மை நிலை இவ்­வாறே உள்­ளது. காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் திறக்­கப்­ப­டு­வது சரி­யான வழி­மு­றை­யா­யினும், இது தொடர்­பாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதே சிறந்த வழி­யாகும். காணாமல் போனோர் தொடர்­பாக இரா­ணு­வத்­தி­னரோ, பொலி­ஸாரோ தண்­டிக்­கப்­பட மாட்­டார்கள் என்று அர­ச­த­ரப்பில் கூறப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றாயின் சரி­யான நீதியை எவ்­வாறு எதிர்­பார்க்க முடியும். ஆகவே, சர்­வ­தேச விசா­ரணை என்­பது அவ­சி­ய­மா­கி­றது.

ஆங்­காங்கு நடை­பெறும் மீள்­கு­டி­யேற்றம், காணி­வி­டு­விப்பு ஆகி­ய­வற்றை நடை­மு­றைப்­படுத்­து­வதன் மூலம் தமிழ்­மக்­களின் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டு­வ­தாக ஒரு மாயை உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. காணி­வி­டு­விப்பும், மீள்­கு­டி­யேற்றமும் யுத்­தத்தின் பின்­ன­ரான பக்­க­வி­ளை­வு­களே அன்றி இவையே தமிழ்­மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு ஆகாது.

புதிய அர­சியல் யாப்பில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு என்ற வாசகம் நீக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­சியல் யாப்பு திருத்தம் என்ற வாசகம் நீக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே புதிய யாப்பு தொடர்­பாக தெளிவற்ற தன்­மையே காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் நீடித்­தி­ருக்கும் தேசிய பிரச்­சி­னைக்கு இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்ப­டையில் நீடித்த நிலை­யான நியா­ய­மான அர­சியல் தீர்­வொன்று புதிய அர­சியல் யாப்பின் ஊடாக கிடைக்கும் என எவ்­வாறு பொது­மக்­க­ளா­கிய எம்மால் நம்­பிக்­கொண்­டி­ருக்க முடியும்.

ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மற்றும் முஸ்லிம் சகோதரர்களோடு இணைந்து வாழ்வதற்கு தயாராக இருக்கின்றபோதும் மனதளவில் இன்னமும் தமிழ் மக்கள் தயாராகவில்லை. இதுவே தற்போதைய யதார்த்தமாகவுள்ளது. ஆகவே ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதினை வெல்ல வேண்டுமனால் முதலில் ஒவ்வொரு பொது மகனும் அன்றாடம் எதிர்கொள்ளும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை உடன் எட்டும் வகையில் ஆட்சியாளர்கள் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியது அவசியமாகின்றது.

SHARE