வட கொரியா வெள்ளத்தில் சிக்கி 133 பேர் பலி: ஐ.நா அதிர்ச்சி தகவல்

257

 

வட கொரியா நாட்டில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 133 பேர் பலியாகியுள்ளதாகவும், 395 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

மேற்கு வட கொரியாவில் கடும் மழை பெய்ததை தொடர்ந்து அங்குள்ள Tumen ஆறு நிரம்பி அப்பகுதி குடியிருப்புகளில் புகுந்துள்ளது.

இதில், சாலைகள், இருப்பு பாதைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன.

இதுமட்டுமில்லாமல், சுமார் 35,500 வீடுகள் சேதமடைந்ததால் நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் 133 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், 395 பேர் காணாமல் போயுள்ளனர். ஒரு லட்சம் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வட கொரியா வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 1945ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட தற்போது ஏற்பட்ட வெள்ளம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.

மேலும், இயல்பு நிலை திரும்புவதற்காக அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

SHARE