வன்னிப் படுகொலைகளை மறைப்பதில் தவறில்லை : பிரித்தானிய அரசு

385

 

 

unionjakவன்னியில் நடைபெற்ற அழிப்புத் தொடர்பான போர்க்குற்ற அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படத் தேவையில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அறிக்கை பிற்போடப்படலாம் என தனது அரசு கருதுவதாக வெளிவிவகார அமைச்சர் ஹூகோ சுவயர் தேரிவித்துள்ளார். இலங்கையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அரசங்கத்திற்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கை என்பது தண்டனையல்ல, நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான விபரங்கள் மட்டுமே. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடைபெறும் போதே அதனைச் சாட்சியின்றி நடத்த ராஜபக்ச கும்பலுக்கு உதவிய அதே அரசுகள் இப்போதும் அதனை மறைப்பதற்குத் துணை செல்கின்றன.

u1_india-srilanka-sonia images

அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகளின் பின்னால் நாக்கைத் தொங்கப்போடுக்கொண்டு அலைந்த பிழைப்புவாதத் தமிழ்த் தலைமைகள் இப்போது மக்களை நட்டாற்றில் விட்டுள்ளன. இது வரைக்கும் மக்கள் சார்ந்த வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்கத் தவறிய தமிழ் பிழைப்புவாதத் தலைமைகள் முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைக் காட்டிக்கொடுத்துள்ளனர்.

SHARE