வயதான தம்பதிகளுடன் வசித்து வரும் சிட்டுக்குருவி 

271
ஜப்பானில் வயதான தம்பதிகளுடன் பாசத்துடன் சிட்டுக்குருவி ஒன்று வளர்ந்து வரும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.ஜப்பானின் புகையா என்ற நகரத்தில் Yoshiko Fujino என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் தனது பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்புகையில் அழகான சிட்டுக்குருவி ஒன்று அவரது தோளில் வந்து அமர்ந்துள்ளது.

தன்னை விட்டு செல்ல மனமில்லாத சிட்டுக்குருவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் Yoshiko.

அதற்கு Pee Chan என செல்லமாக பெயரிட்டுள்ளதுடன் மிகவும் சுதந்திரமாக வீடு முழுவதும் சுற்றுத் திரிவது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து வயதான தம்பதி கூறுகையில், Pee Chan குடும்பத்தில் ஒரு நபர் மாதிரி என்றும், சுதந்திரமாக இருப்பது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

வீடியோவை காண

SHARE