வயது வந்த பெண்ணை தனியே வீட்டை விட்டு வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டதன் விளைவு தான் இஸ்லாமிய வாழ்க்கை நெறி, கற்பழிப்பு,

1348

 

 
அன்று வன்னியில்
சரண்யா என்றொரு O/L மாணவி
சில கயவரின் கைக்களுக்குள் அகப்பட்டு
கசங்கியப் போனாள்.
kolaiaa2-680x365
இன்று புங்குடுதீவில்
வித்யா என்றொரு A/L மாணவி
பல காமுகர்களின் காமத்தீக்கு இரையாகி
பொசுங்கிப் போனாள்.

நாளை எங்கு
யார் என்றொரு கேள்வியை
முழு இலங்கையுமே கேட்கப்பயப்படுகிறது…

தடுக்க என்ன வழி என்று
இப்போதுதான் சமூகம்
சிந்திக்கத்தொடங்கியிருப்பதாய்த் தெரிகிறது…

இஸ்லாமிய சட்டங்களை
விமர்சித்த உள்ளங்கள்
இப்போதுதான் இஸ்லாத்தின் குற்றவியலை
திரும்பிப்பார்க்க ஆரம்பித்துள்ளது…

ஆனால், இஸ்லாம் வெறுமனே
குற்றங்களை அடையாளப்படுத்தி,
தண்டனைகளை வழங்குவதை மட்டும்
மார்க்கமாக்கவில்லை…

வருமுன் காப்போம் என்று
குற்றங்கள் நிகழாமல் தற்காத்துக்கொள்ளவும்
இஸ்லாம் வழிகாட்டியிருக்கிறது…

இச்சம்பவங்கள் காதுகளுக்கு எட்டியபோது, ஒட்டு மொத்த கற்பழிப்பு, கொலைக்குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் ஒவ்வோர் ஈரமுள்ள மனங்களிலும் தளிர்விட்ட சோகத்தின் வெளிப்பாடாய் இருந்தது. இதற்காக எத்தனை ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள், மௌன ஊர்வலங்கள், சாலைமறியல்கள், கடையடைப்புக்கள். மாணவி என்ற பரிதாபத்தன்மையும் கொலையின் கொடூரத்தன்மையும் மக்களை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டிருக்கிறது.

வெள்ளம் வருமுன் அணைகட்டவேண்டியதன் அவசியத்தை அலட்சியம் செய்துவிட்டு, பயிர் நிலம் அழிந்துபோனதன் பின் பழிதீர்க்கக்கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறோம். பழியைத் தீர்த்துக்கொள்வதால், போன உயிர் திரும்பிவரப்போவதுமில்லை. அந்தப்பேதையைப் பெற்ற தாய் மனநிறைவடையப்போவதுமில்லை. அதற்காக குற்றவாளிகளை தண்டிக்காமல் விட்டுவிடுவதென்பதுமல்ல.

அல்லாஹ் திருக்குர்ஆனில்,
“பழியெடுப்பதில் உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது” என்று தெளிவாகக்கூறியுள்ளான்.

(ஸூரத்துல் பகரஹ் : வசனம் – 179)

நடந்தமுடிந்தவற்றுக்குத்தண்டனையை யோசிக்கும் சமூகம், இது எங்கு ஏற்பட்ட கோளாறு என்று சிந்திப்பதும், இனிமேல் இதுபோன்ற மிலேச்சத்தனமான செயல்கள் நடக்காதிருக்க என்ன செய்யலாம் என்றும் இஸ்லாமியக்கண்ணோட்டத்தில் நோக்குவதும் இஸ்லாத்தின் அழகிய வழிகாட்டல்களிலிருந்து நல்லபல தீர்வுகளைக்கண்டறியக்காரணமாய் அமையும்.

இன்று தண்டனை கோரி கோஷம் போட்டுக்கொண்டிருக்கும் உறவுகள், மறைந்த வித்யாவுக்காக மட்டுமல்ல, இன்னும் ஊடகச்சந்தைக்கு வந்திராத வாழ்க்கையை இழந்த எத்தனையோ மாணவிகளின் பாதுகாப்புக்காக என்ன முன்னேற்பாடு செய்திருந்தது என்றொரு கேள்வியைத்தொடுத்தால் மௌனம் தான் பதிலாகக் கிடைக்கிறது.

வித்யா கொலை வழக்கின் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, காவல்நிலையத்தின் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் “இவ்வாறெல்லாம் நடக்குமென்று முன்னமே எமக்கு எவ்வாறு தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இவரது ஆதங்கத்தில் தான் என்ன நியாயம் தெரிகிறது?

அனைத்துலக மக்களுக்கும் இஸ்லாம் தான் நிரந்தர தீர்வு என்ற வகையில் நாம் நோக்குகையில்,

பாதிக்கப்பட்டவரின் தரப்பில் இஸ்லாம் கூறும் பெண்ணின் பாதுகாப்புக்கான பல முக்கிய வரம்புகள் மீறப்பட்டிருந்தாலும், முஸ்லிம்களல்லாதவர்களும் அன்று கடைப்பிடித்த இன்றும் கடைப்பிடித்து வருகின்ற, இனி என்றும் கடைப்பிடிக்கவேண்டிய முக்கியமானதொரு வரம்பை மீறியிருப்பதன் விளைவு, ஒரு அபலைப்பெண்ணை கற்பழிப்பில் தொடங்கி கொடூரமான கொலை வரை கொண்டு சென்றதற்கானதொரு ஓட்டையாக (Loop Hole) நோக்கமுடிகிறது.

அதுவொன்றே வித்யாவின் தாய் மீதான பழையதொரு கோபத்தை பழிதீர்த்துக்கொள்ள வழிதேடியவர்களுக்கு,


1- வித்யாவை கற்பழிக்கும் யோசனைக்கு வித்திட்டிருக்கலாம்.
2-அவளை அவர்கள் கடத்திச்செல்லும் வேலையை இலகுபடுத்தியிருக்கலாம்.
3-காரியத்தை கட்சிதமாக முடிக்கும் வரை இடையூறுகள் வராதிருந்தமைக்கு காரணமாயிருக்கலாம்.

இப்படி அதன் விளைவுகளை கூறிக்கொண்டே போகலாம். ஆடை அவிழ்ப்பு, கூட்டுக்கற்பழிப்பு, தொலைபேசியில் உரையாடி இன்னோர் கும்பல் வரவழைப்பு, வந்தவர்களும் கற்பழிப்பில் பங்கேற்பு, கொடூரமான கொலை என்று நீண்டநேர நிகழ்வுகள் அனைத்தையும் கையடக்கத்தொலைபேசியில் வீடியோவாக அக்காமுகர்கள் பதியுமளவுக்கு சாத்தியமானதாக சூழ்நிலை படுமோசமாக அமைந்திருக்கிறது.

மகளுக்கு என்ன நேர்ந்தது என்பது மாலை வரை வீட்டாருக்குக் கூடத்தெரியாமல் இரவு வரை தேடி முடியாமல், முறைப்பாடு செய்த போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரியின் வாயாலேயே “உங்கள் மகள் எவனுடனாவது ஓடிப்போயிருப்பாள்” என்ற இழிசொல்லை சோகத்தால் கனத்த இதயத்துடன் அவளது தாயின் காதுகள் கேட்கவேண்டியதொரு அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

அவ்வளவு ஏன்? வீட்டிலிருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் இப்பாதகச்செயல் நடந்தேறிக்கொண்டிருக்க, மானபங்கம் அல்லது கற்பழிப்பு முயற்சியுடனாவது தடுத்து, விடயம் கற்பழிப்பு, கொலை வரை செல்லாமல் காப்பாற்ற முடியாது போய்விட்டதே.

முந்தைய நாள் படபடத்த உள்ளத்துடன் இரவு வரை தேடிவிட்டு, மறுநாள் அதிகாலையில் சிதைந்த தன் சகோதரியின் உடலைக்கண்டு மயங்கி வீழ்ந்த சகோதரன், நாள்தோறும் தன் சகோதரி வீட்டை விட்டு வெளியேறும் போது, அவனும் உடன் துணைக்கு சென்று வந்திருந்தால், இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா…??? இத்துன்பம் நேர்ந்திருக்குமா…???

வெளியில் எப்போதும் சகோதரனுடனேயே செல்கிறாள் என்று ஒரு பெண்ணை இனங்காணப்படும் போது, காமுகர்களுக்கும் கயவர்களுக்கும்,
1- அவளை கற்பழிக்கும் சிந்தனை தோன்றியிருக்குமா…???
2- அவ்வாறாயினும், அவளை கடத்திச் செல்ல முடிந்திருக்குமா…???
3- அவ்வாறாயினும், இடையூறின்றி காரியத்தை முடித்திருக்கமுடியுமா…???
4- அவ்வாறாயினும், இன்னொரு கும்பலை வரவழைக்குமளவு நிதானமாகக் கையாளமுடிந்திருக்குமா…???
5- அவ்வாறாயினும், மாலை வரை வீட்டாருக்கு செய்தி தெரிவதை தடுத்திருக்க முடியுமா…???
6- அவ்வாறாயினும், கற்பழிப்பு கொடூரக்கொலைவரை தான் சென்றிருக்குமா…???

இவற்றில் எதுவொன்றையும் அக்குடும்பத்தினரால் தடுக்கமுடியாமல் போய்விட்டதே, ஏன்…???

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!!!
அதனை நன்கு நாம் ஆழமாக சிந்திக்கவேண்டும்.

இது யார் செய்த குற்றம்? எதனால் நேர்ந்த தவறு? எங்கு விட்ட பிழை?

இம்மூன்று கேள்விகளுக்கும் நாம் விடை தேடினால்…,

1- இது வீட்டார் செய்த குற்றம்
2-இது தனிமையால் ஏற்பட்ட தவறு
3-இது வெளியில் செல்லும் முறை பேணுவதில் விட்ட பிழை

என்ற விடைகள் எமக்குக் கிடைக்கும்.

வீட்டார் வயது வந்த பெண்ணை தனியே வீட்டை விட்டு வெளியில் சுதந்திரமாக நடமாட விட்டதன் விளைவு தான் இவ்வனைத்துக்கும் வித்திட்டுள்ளது எனலாம். இக்காரணியானது, இனம், மதம், குலம் என்ற பாகுபாடுகளுக்கப்பால் நின்று பார்க்கப்படவேண்டியதாகும். மனிதனின் நல்ல, தீய விடயங்களுக்கு தீர்வு வழங்காமல் இஸ்லாம் எவ்விடயத்தையும் விட்டுவைத்ததில்லை என்பதற்கு இக்காரணியும் மிக முக்கிய அம்சமாகும்.

ஆகுமான ஆண்துணையின்றி, முழுமையாகத் தன்னை மறைக்கும் ஆடையின்றி, ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காததன் நுட்பத்தை நாம் புரிந்துகொள்வதற்கு இப்பாதகச்செயல் எமக்கு ஒரு பதச்சோறு. இதனைப்புரிந்து ஆண்மக்கள் தங்களது தாய், மகள், சகோதரிகள் அத்தியவசிய தேவை நிமித்தம் வீட்டிலிருந்து வெளியேறும் போது தங்களது பாதுகாப்பில் அழைத்துச்சென்றுவரவேண்டும். ஒரு பெண்ணானவள் வெளியில் செல்லும் போது, குறைந்த பட்சம், வீட்டிலிருக்கும் சிறு பையனையாவது துணைக்கழைத்துக்கொள்ளவேண்டிய மிக அத்தியவசியமானதாகும்.

அல்லாஹ் நம் நாட்டில் பல ஊர்களில் நல்ல அமைதியான சூழலை அருட்கொடையாக வழங்கியிருக்கிறான். அல்லாஹ் ஓர் ஊருக்கு வழங்கியிருக்கின்றதொரு அருட்கொடை அதனைப்பாதுகாத்து நன்றியுடன் நடக்கத்தவறும் பட்சத்தில் தான் பறிக்கப்பட்டுப்போயிருக்கிறது. இதற்கு அல்-குர்ஆனில் பல சமுதாயத்தினரின் சம்பவங்கள் எமக்கு சான்றாக உள்ளன. எமதூரில் நிலவும் பாதுகாப்பானதொரு அமைதிச்சூழலின் காரணமாகத்தான் எமது பெண்மக்கள் ஊர்களில் நினைத்த இடங்களுக்கெல்லாம் வீட்டைவிட்டு தனிமையில் வெளியேறி நடமாடித்திரிவது சர்வசாதாரணமாய்ப் போயிருக்கிறது. இது எமது சமூகத்திற்கு ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தோற்றுவிக்காது. மாறாக, இது எமதூர்களில் இவ் அருட்கொடை பறிக்கப்படுவதற்கான காரணியாகத்தான் பின்னாளில் அமைந்துவிடும். அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாத்தருள்வானாக.

SHARE