வயிற்றுக்கோளாறால் அவதி: ஒரே சமயத்தில் 10 தென்ஆப்பிரிக்க வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பு

331
தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணியின் 10 வீரர்கள் ஒரே சமயத்தில் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ மற்றும் அவுஸ்திரேலியா ‘ஏ’ ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் சென்னையில் நடந்து வருகிறது.இதில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா ‘ஏ’- தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் மோதின.

இந்த போட்டியின் போதே பாதி தென்ஆப்பிரிக்க வீரர்கள் வயிறு சரியில்லாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

அதே போல் தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி காக் சதம் அடித்த நிலையில் 108 ஓட்டங்களுடன் பாதியேலேயே வெளியேறினார்.

தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணியில் களத்தடுப்பில் ஈடுபட கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே அந்த அணியின் வீடியோ ஆய்வாளர் களத்தடுப்பில் இருந்தார்.

மேலும், ஆள் இல்லாத காரணத்தால் இந்திய வீரர் மன்தீப் சிங் கூட தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்காக களத்தடுப்பில் ஈடுபட்டார்.

தென்ஆப்பிரிக்காவுக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி இன்று நடைபெற வேண்டும்.

ஆனால் நிலைமை சரியில்லாததால், தென்ஆப்பிரிக்காவுக்குப் பதில் இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன.

தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணியில் பாதி வீரர்களுக்கு புட் பாய்சனால் தான் வயிறு பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE