வல்லுறவுக்கு பிறகு வாழும் பெண்களின் வாழ்க்கை நிலை

293
வல்லுறவு குற்றவாளிகளை தண்டிப்பதில் ஆர்வம் காட்டும் சமுதாயம். பாதிக்கப்பட்ட பெண்களை அவமானப்படுத்தாமல் வாழவைக்கிறதா?வல்லுறவுக்கு பிறகு, வாழ பிடிக்காமல் வெட்கித்தலை குணியும் பெண்களுக்கு அந்த நினைவை நீக்கிவிட்டு நேசிக்க, உலகில் மனிதம் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதே ஸ்மிதா சர்மா எடுத்துள்ள ஆவணப்படத்தின் படத்தின் நோக்கம்.

ஸ்மிதா சர்மாவின் உறவுக்கார பெண், வல்லுறவு பாதிப்புக்கு பிறகு வகுப்பு தோழிகளின் வாய் தாக்குதலை தாங்கிக்கொள்ள முடியாமல் தன் வாழ்வையே அழித்துக்கொண்டால். இதுவே ஸ்மிதாவின் இந்த முயற்சியை முடுக்கியது.

கொல்கத்தா மற்றும் நியூயோர்க்கை அடிப்படையாக கொண்ட ஒரு புகைப்பட பத்திரிகையாளர்தான் இந்த ஸ்மித சர்மா.

இவர் 2014 டிசம்பரில் ஆவணப்பட முயற்சியை துவங்கினார். அதற்காக, அவர் வல்லுறவுக்கு பிறகு வாழும் பெண்கள் பலரை இந்தியாவில் சந்தித்தார்.

அவர்கள் துயர கதைகேட்டு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியாக விரும்பாத ஷபீனா

கொல்கத்தா அருகில் ஷபீனா என்ற பெண் 8 வருடங்களுக்கு முன் அவள் சமூகத்தை சேர்ந்த ஒருவனால் வல்லுறவுகொள்ளப்பட்டால்.

அவள் உறவினர்களும் அண்டைவீட்டார்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் அவனுக்கு மனைவியாக வாழ ஷபீனா சம்மதிக்கவில்லை.

அந்த அசம்பாவிதத்தால் அவள் ஒரு மகனுக்கும் தாயானாள் அவள் குடும்பத்தினர் குற்றவாளியை நீதிமன்றத்திலே எதிர்கொண்டனர்.

பெண்வெறியோடு கலந்த பேதவெறி

கொல்கத்தாவில் ரனகாட் நகரில் உள்ள ஜீசஸ் அண்ட் மேரி மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சகோதரி சாந்தி, தனது சக ஊழியரான 72 வயதுடைய கன்னியாஸ்திரி, ஒரு கும்பலால் வல்லுறவுகொள்ளப்பட்டதால் மனம் உடைந்தார்.

அந்த கும்பல் இவரை ஒரு அறையில் கைகால்களை கட்டிவைத்துவிட்டு மற்றொரு அறையில் கன்னியாஸ்திரியை பாலியல் பலிகடா ஆக்கியது.

அந்த முதிர் கன்னியாஸ்திரியின் பிறப்புறுப்பில் வெளிநாட்டு பொருட்களை திணித்து கொடுமைப்படுத்தியிருந்தனர். இது காமவெறியும், மதவெறியும் கலந்து விளையாடிய அவலம். இதுபோல, பல பெண்களை சந்தித்தார்.

ஸ்மிதாவின் ஒரே கேள்வி

ஸ்மிதா தான் சந்தித்த அந்த பெண்கள் எல்லோரிடமும் முன்வைக்கும் ஒரே கேள்வி, வல்லுறவுக்கு நாம் எந்த வகையில் காரணமானோம் என்பதுதான்.

பாதிக்கப்பட்ட நம்மீதே இந்த சமூகம் குற்றம் கண்டுபிடிப்பதற்கான காரணம் புரியவில்லை என்கிறார்.

பெண்ணாக இருப்பதும், இளமையில் உடல் செழிப்பதும் காரணம் என்று இயற்கை மீது பழிபோட முடியுமா?

மது, கல்வியின்மை போக்குவது இதை குறைக்கிற ஒரு வழி எனலாம். வெளிச்சத்துக்கு வராத வல்லுறவு சம்பவங்கள் ஏராளம் இருக்கலாம்.

வல்லுறவில் ஈடுபடும் குற்றவாளிகள் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் உதாசினப்படுத்துகிறார்கள் என்பதைவிட, பெண்களிடம் அவர்கள்தான் முரட்டுத்தனமாக சரணடைகிறார்கள்.

சமூகமும் சரியல்ல

வல்லுறவுக்குப் பிறகு வாழும் பெண்ணை ஒரு அவமான அடையாளமாக பார்க்கும் இந்த சமூகம், வல்லுறவு கொண்டவனைவிடவும் கண்மூடித்தனமானதே.

ஒருமுறை வல்லுறவு கொண்டுவிட்டு, அதன்பிறகு, அந்த உறவுக்கு வழியின்றி சிறையில் வாடும் அவனது, எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவை என்னவென்று கணிப்பது.

மனிதன் ஒரு சமூக விலங்குதான், வல்லுறவின்போது சமூகம் மறந்த விலங்காகிறான். அந்த சம்பவத்துக்குப் பிறகு, சமுதாயம் அவனுக்கு விலங்கிடுகிறது அவளை விளங்காமலே விடுகிறது.

தண்டிப்பது நடவடிக்கை தவிர்ப்பதே நாகரீகம்

வல்லுறவுக்கு எதிராக உள்ள கடுமையான சட்டங்களால் மனிதர்களை தண்டிக்க முடிகிறதே தவிர, சமுதாயத்தில் வல்லுறவை தடுக்க முடிவதில்லை.

அது சட்டங்களை கடந்த வேறுவழிகளும் வல்லுறவை தடுக்க தேவைப்படுவதை நமக்கு உணர்த்துகிறது.

எல்லா தலைமுறைக்கும் எல்லா பகுதிகளிலும் புரிதலை ஏற்படுத்திக்கொண்டே இருப்பதும் எளிதல்ல.

ஆண்களுக்கு பெண்களைவிட ஈர்ப்பான ஒரு விடயம் உலகில் இல்லை. ஆண்களுக்கான சாதனை ஊக்கமே பெண்கள் உலகம்தான்.

வல்லுறவை கடுமையாக பார்ப்பதும் பொருத்தமில்லாதது, இலகுவாக விடுவதும் ஆபத்தானது.

ஒரு பெண் வல்லுறவால் எங்கோ பாதிக்கப்படுவது, தன் தாய்க்கு நேர்ந்த அவமானமாக ஒவ்வொரு ஆணும் கருத வேணும்.

-மரு.சரவணன்

SHARE