அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தெற்கு டகோட்டா மாகாண பெண் கவர்னர் கிறிஸ்டி நோம் போட்டியிட முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கிறிஸ்டி நோம், தனது வளர்ப்பு நாய், ஆட்டை கொன்றதாக அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது குடும்பப் பண்ணையில் கிரிக்கெட் என்று பெயரிடப்பட்ட 14 மாத நாய், கடுமையாக நடந்து கொண்டது.அதை தொடர்பு கொண்ட எவருக்கும் ஆபத்தானதாக இருந்தது. இதனால் அந்த நாயை சுட்டுக்கொன்றேன் என்று கூறியுள்ளார்.
தனது நாயைக் கொன்றதைப் போலவே ஆட்டையும் கொல்ல முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
அந்த ஆடு வெறித்தனமாக குழந்தைகளை துரத்தி அவர்களை இடித்து தள்ளி ஆடைகளை கிழித்தது என்று தெரிவித்துள்ளார்.இதற்கு கிறிஸ்டி நோமுக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா கண்டனம்தெரிவித்துள்ளது.