வவுனியா கள்ளிக்குளம்; மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கரிசனை செலுத்தப்படும் வடக்கு சுகாதார அமைச்சர்.

284

 

வவுனியா கள்ளிக்குளம்; மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கரிசனை

செலுத்தப்படும்

வடக்கு சுகாதார அமைச்சர்.

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கவனம்

செலுத்தப்படுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். நேற்று (19.09)

கள்ளிக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது 1977 ம் ஆண்டுகளிலிலேயே இடம்பெயர்வை சந்தித்த எல்லைப்புறக்கிராமமான

கள்ளிக்குளம் பழமையான கிராமமாகும். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் 1990 களில் அங்குள்ள

மக்கள் முற்றாக இடம்பெயர நேரிட்டது. இதன்பின்னர் 2010ல் மக்கள் மீள்குடியேறியுள்ளனர். 1990 களில்

45குடும்பங்கள் வாழ்ந்துவந்துள்ள நிலையில் தற்போது 212குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளனர்.

இவர்களுக்கான அரை நிரந்தர வீடுகள்ரூபவ் மலசலகூடங்கள்ரூபவ் கிணறுகள் அரசசார்பற்ற நிறுவனமொன்றினால்

வழங்கப்பட்டுள்ள நிலையில் சில அடிப்படை வசதிகள் இதுவரை செய்யப்படாதுள்ளமை வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக வீதி அபிவிருத்திரூபவ் குடிநீர்வசதிரூபவ் போக்குவரத்து வசதிரூபவ் மருத்துவ வசதிகள் மற்றும் வாழ்வாதார

வசதிகள்; போன்றன அபிவிருத்தி செய்யப்படவேண்டுமென பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சனைகள் இந்தக்கிராமத்தில் மட்டுமல்ல. வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் உள்ளது. 30

வருட கொடிய யுத்தம் அதனால் ஏற்பட்ட இடம்பெயர்வுகள் மக்களின் வாழ்வியலை சிதைத்துள்ளது. படிப்படியாகவே

மக்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளமுடியும். வவுனியா பிரதேச செயலகம் உங்களின் பிரச்சனைகளை

நன்குஅறிந்து அவற்றினை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை செய்து வருகின்றார்கள். அரசாங்க

அதிகாரிகளால் அனைத்தையுமே உடனடியாக செய்து விடமுடியாது. அவர்களுக்கும் சில வரையறைகள் உள்ளன. உங்களின்

வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட உங்களின் பிரதிநிதிகள் நாங்கள். உங்களின் பிரச்சனைகளை தீர்க்க

எங்களால் முடிந்தவற்றை செய்ய ஆவலாயுள்ளோம்.

முதற்கட்டமாக சிறுநீரக நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் சுத்தமான வடிகட்டிய

குடிநீர்வழங்கல்ரூபவ் மின்சார இணைப்பை விரிபுபடுத்தல்ரூபவ் வீட்டுத்தோட்டச்செய்கை மற்றும் மருத்துவ சிகிச்சை

நிலையம் என்பன தொடர்பில் உடனடி கவனம் செலுத்துவதாக வடக்கு சுகாதார அமைச்சர்; தெரிவித்தார்.

இந்தக்கூட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன்ரூபவ் கள்ளிக்குளம் கிராம அலுவலர் அமலதாஸ்ரூபவ்

கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ராமதாஸ் உட்பட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

unnamed-4 unnamed-5 unnamed-6 unnamed-7 unnamed-8

SHARE