வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திராவின் 500000 விபகாரத்தில் சிக்கினார்-பா.உ சிவமோகனின் அதிரடி நடவடிக்கை

282

 

வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திராவின் கடமை தவறிய தில்லுமுல்லுக்களையும் நிதிகளை தவறாக பயன்படுத்தி தன்  கைவசப்படுத்த முற்பட்டமை மற்றும் மக்களால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மோசடிகளையும் இன்று வவுனியாவில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அம்பலப்படுத்தியுள்ளார் .

 

DSC00355
வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திரா மீது மக்களால் கொடுக்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள், தகவல்கள் ஆயிரக்கணக்கில்  தனக்கு கிடைக்கப்பட்ட போதும் என்னால் மேலெழுந்தவாரியாக சில மோசடிகளை மாத்திரமே முன்வைப்பதாக தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் அவர் ஊடகவியாலாளர் மத்தில் முன்வைத்தார் .
 நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் , மக்கள் வழங்கியதாக குறிப்பிட்டு தர்மேந்திரா மீது முன்வைத்த குற்றங்கள் .

01.மொனரா என்னும் விளம்பர நிறுவனம் தனது விளம்பர செயற்பாடுகளுக்கான நகராட்சி கணக்கிற்கு  சேரவேண்டிய 500.000 ரூபா பணத்தை இவரிடம் காசோலையாக கொடுத்த போது அதை அவர் இன்னொருவரின் கணக்கில் இட்டு மாற்றம் செய்தமையும் நகராட்சி  கணக்குக்கு அந்தப்பணம் வைப்பிடப்படாமையும் மோசடியை உறுதிப்படுத்துகிறது .
02.நகரசபைக்கு சொந்தமான பார வாகனங்களை ஒப்பந்தக்காரர்களுக்கு கைத்துண்டு ஒன்றை மாத்திரம் வழங்கி எந்த ஒப்பந்தமோ அல்லது அதற்கான வாடகைகளோ முறையற்ற விதத்தில் பெறப்பட்டமை.
03. வேலைநாட்கள் தவிர்ந்த நாட்களில் மயானத்திற்குரிய வாடகை அல்லது பயன்பாட்டு பணத்தை தொகை குறிப்பிடாத ஒரு கைத்துண்டு மூலம் வசூலித்தமை .இதற்கு என நியமித்த உத்தியோகத்தர் ஒருவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது .
04.முறைப்படி பகிரங்க ஒப்பந்தங்கள் எதையும் செய்யாமல் தனக்கு விரும்பியவர்களுக்கு ஒப்பந்தங்களை கொடுப்பது.
05.ஏலத்தின் மூலம் ஒழுங்கு படுத்தப்பட்ட முதலாம் நபருக்கு அந்த ஏலத்தை கொடுக்காமல் தனக்கு வேண்டிய இரண்டாம் நபருக்கு கொடுத்தமை.இதனால் நகராட்ச்சிக்கு வரவேண்டிய 800.000 ரூபா வருமானம் இழப்பீடு ஏற்படுத்தியமை .
06. 5 வருடகாலம் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் பெண் ஊழியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்காது தடை போட்டு அவரை தன்னுடைய மோசடிகளுக்கு பயன்படுத்திக்கொண்டமை .
07.எழுதுவினைஞராய்  பதவிக்கு வந்த அந்த பெண் ஊழியரை அவரது தகுதிக்கும் மேற்பட்ட வேலைகளை கொடுத்து அச்செயற்பாடுகளை  தன்னாதிக்கத்தில் வைத்திருந்தமை .
08.முதலமைச்சரினால் உள்ளகக்கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்ட போதும் அவரை கணக்காய்வு வேலைகளை செய்யவிடாமல் தடுக்கும் முகமாக கணக்குவழக்குகளை தன்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை .
என சிவமோகன் அவர்கள் தர்மேந்திரா மீதான குற்றங்களை சரளமாக அடுக்கிக்கொண்டே சென்றார் .
இன்று திங்கள்கிழமை அந்த மொனரா விளம்பர நிறுவனம் நகராடசிக்கு வழங்கிய 500.000 ரூபா  பெறுமதியான காசோலை மோசடி தொடர்பில் முதலமைச்சரால் நிறுவப்பட்ட 3 பேர் அடங்கிய குழு ஒன்று  இப்போது தர்மேந்திராவை நகராட்சி  அலுவலகத்தில் வைத்து விசாரணைகளை செய்து வருவதாகவும் அறிய முடிகிறது .
1000 கணக்கில் அதிகரித்த இந்த குற்றச்ச்சாட்டுகளால் தர்மேந்திராவுக்கு பதவி பறிபோகும் நிலையும் நீதிமன்றில் காலத்தை ஓட்டும் நிலையும் உருவாக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகின்றனர் .
முதலமைச்சரின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தவவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திராவின் விசாரணைகள் அரச சொத்துக்களை மோசடி செய்பவர்களுக்கும்  மக்கள் பணத்தை சுரண்ட நினைப்பவர்களுக்கும் மக்கள் கடமையை மறந்து தன்னாதிக்க போக்கில் செல்பவர்களுக்கும் எதிர் காலத்தில் பாரியதொரு எடுத்துக்காட்டாக அமையும் என நம்புவதாக மக்கள் தம் கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர்
SHARE