வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானத்துக்கான காணியை வவுனியா பிரதேச செயலாளர் இன்னமும் வழங்கவில்லை

518

 

வவுனியா, ஓமந்தை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு பிரதேச சபையால் கோரப்பட்ட காணி, வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதால் அதனை பிரதேச சபைக்கு வழங்கமுடியாது என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானத்துக்கான காணியை வவுனியா பிரதேச செயலாளர் இன்னமும் வழங்கவில்லை என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் க.சிவலிங்கம் நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா ‘மலரும்’ இணையத்திற்கு தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஓமந்தைப் பகுதியில் பிரதேச சபையினரால் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வேலி போடப்பட்டுள்ள காணி அரச காணியாகும். அதற்கு என்னிடம் அனுமதியும் பெறப்படவில்லை. குறித்த காணியை விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு வழங்கமுடியாது. ஏனெனில் குறித்த காணியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால், வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களுக்கான பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அத்துடன் அதனை அண்டிய பகுதியில் சிறுவர் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு நிலையமும் தனித்தனியாக அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பை வழங்கி அவர்களையும் சமூகத்தின் சிறந்த மனிதர்களாக மாற்ற முடியும். இப்பகுதியில் இந்த மூன்று கட்டங்களும் அமைக்கப்பட்டு தொழிற்படுகின்ற போது அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும். – என்றார்.

SHARE