வவுனியா வடக்குப் பிரதேச சபையினை முழுமையாக சிங்கள மயமாக்கும் சூழ்ச்சியினை தடுத்து நிறுத்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையினர் அனைவரும் உடன் ஆவன செய்ய வேண்டும்

268

 

வவுனியா வடக்குப் பிரதேச சபையினை முழுமையாக சிங்கள மயமாக்கும் சூழ்ச்சியினை தடுத்து நிறுத்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையினர் அனைவரும் உடன் ஆவன செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் ஓர் அவசர கோரிக்கையினை கிராம அபிவிருத்திச் சங்கங்கள் விடுக்கின்றனர்.

இது குறித்து பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கையில் ,

dcp287676767676-2 vanni_1072015_2

வவுனியா வடக்கு பிரதேச சபைப் பிரிவில் தற்போது சுமார் 4500 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சிங்கள மக்களும் கிடையாது. இதேபோல் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தற்போதுவரை 14 உறுப்பினர்கள் தேர்வாகின்றனர். இதன் பிரகாரம் இறுதியாக 2011ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேர்வான 14 பேரில் 3 சிங்களப் பிரதிநிதிகள் தேர்வானவை பெரும் சர்ச்சையினை ஏற்படுத்துவதோடு இது தொடர்பில் பாரிய கேள்விகளும் எழுகின்றன.

அதாவது சிங்கள மக்களே வாழதா பிரதேச சபைக்கு சிங்களப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவது தொடர்பில் தமிழ் மக்களின் அதிருப்தியும் வெளியிடப்பட்டது. இதற்கு தேர்வாகும் சிங்களப் பிரதிநிதிகள் முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தின் சில பகுதிகளையும் வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச சபை அல்லாத பகுதிகளையும் உள்ளடக்கி வசிக்கும் சம்பத் நுவர பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவகர் பிரிவில் சுமார் 9 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்கின்ற போதிலும் இவர்களிற்கென தனியான ஓர் பிரதேச சபையே கிடையாது . இதனால் இதில் 4 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 3600 வாக்களர்களை வவுனியா வடக்கு பிரதே செயலாளர் பிரிவில் எல்லை நிர்ணயம் செய்து அவர்களிற்கு 4 வட்டாரமாகவும் பிரிவிடை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதலாவது தாக்கமாக இச் சபையின் 4 உறுப்பினர்களை எல்லை மீள் நிர்ணயத்தின் மூலமே இழந்து விட்டோம். இதேவேளை சம்பத் நுவரவில் எஞ்சியுள்ள 6 ஆயிரம் சிங்கள மக்களிற்கும் ஒரு பிரதேச சபை கிடையாது. அதனால் எதிர் காலத்தில் அவர்களும் எமது சபையுடன் இணைத்தால் எமது பிரதிநிதித்துவம் அன்றி ஆட்சி நிர்வாகமே மாறிவிடும்.

ஏனெனில் இங்கு வாழும் தமிழர்கள் 5 ஆயிரம் சிங்கள மக்கள் 9 ஆயிரம் எனக் கணக்கு கூறுவர். எனவே உடனடியாக சம்பத் நுவர பிரதேசத்தினை ஓர் தனியான பிரதேச சபையாக மாற்ற ஆவண செய்யவேண்டும்.இல்லையெனில் வவுனியா வடக்கான நெடுங்கேணி முதல் கனகராயன் குளம் , புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனத் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக உறுப்பினர் சிவமோகன் கருத்து தெரிவிக்கையில் ,

இப் பிரதேச சபை எல்லைப் பரப்பிற்குள் சிங்கள மக்கள் வாழ்பவர்களாயின் அது தொடர்பில் அவர்களிற்கான எல்லை நிர்ணயம் செய்வது கடப்பாடு ஆனால் எங்கோ வசிப்பவர்களிற்கு பிரதேச சபை இல்லை என்பதனைக் காரணம் காட்டி இன்னுமோர் சபையின் வளர்ச்சியை நசுக்கும் நோக்கில் இடம்பெறும் இவ்வாறான செயல்களையும் நல்லாட்சியின் பெயரில் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் எழுவதோடு இதன் பின்னால் நிரந்தர சூழ்ச்சியும் உள்ளதோ என்ற அச்சம் மக்களிற்கு மட்டுமன்றி எமக்கும் உள்ளது. என்றார் .

இவை தொடர்பில் உள்ளூராட்சி சபைகளின் வட்டார நிர்ணய சபை நிர்ணய குழு அங்கத்தவரான பீடாதிபதி பாலசுந்தரம்பிள்ளை தெரிவிக்கையில்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபை வட்டார நிர்ணயத்தின்போதும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினார். இவ்விடயத்திற்கு இத்தீர்வு இன்றியும் இரு வழிகளில் தீர்வினை வழங்க முடியும் .

அதாவது அம் மக்களிற்கு என ஓர் தனியான பிரதேச சபையினை உருவாக்கி அவர்களை அச் சபையின் கீழ் இயங்க ஏற்பாடு செய்வது.

அதேபோன்று குறிப்பிட்ட 4 வட்டாரத்தின் கீழ் வரும் சிங்கள மக்களையும் அதேமக்கள் வாழும் வவுனியா தெற்கு பிரதேச சபையுடன் இணைப்பது.

இவையற்றி இவர்களை வடக்கிற்கு வெளியே உள்ள மாவட்ட பிரதேச சபைகளுடன் இணைக்க முடியாது அவ்வாறு இணைப்பதானால் அது வேறு மாகாணம் என்ற ரீதியில் அது அரசியல் யாப்பு மாற்றத்தின் மூலம் மட்டுமே சாத்தியமானது. எனத் தெரிவித்தார்.

SHARE