வானில் இருந்து விழுந்த உலோக பந்து – அதிர்ச்சியில் வியட்நாம் மக்கள்

515
வியட்நாம் மற்றும் சீனா எல்லையில் திடீரென்று பெரும் சத்தமுடன் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்தினால் வியட்நாம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வியட்நாம் நாட்டின் வடக்கு எல்லையோர பகுதியில் திடீரென்று பெரும் சத்தத்துடன் 3 உலோக பந்துகள் விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்து விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ராணுவ சிறப்பு குழுவினர் அந்த உலோக பந்துகளை சோதனையிட்டுள்ளனர்.

வியட்நாமின் Tuyen Quang பகுதியில் அமைந்துள்ள ஓடையருகியில் விழுந்த பந்தானது சுமார் 45 கிலோ எடை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் சுமார் 6 கிலோ எடை கொண்ட ஒரு பந்தானது குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் அருகே விழுந்துள்ளது.

வியட்நாம் அரசின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு ஒன்று இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில்,

அந்த உலோக பந்துகள் ரஷ்யா நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், வேறு ஏதேனும் ஒரு நாடு அதை வாங்கி பயன்படுத்தியிருக்கலாம் எனவும் முதற்கட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பந்தானது விமானம் அல்லது விண்வெளிக்கலனில் பயன்படுத்தப்படுவதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர், இந்த உலோக பந்து விண்வெளிக்கலனில் எரிபொருள் அமைப்பாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்துறையினரின் கட்டுப்பாட்டில் அந்த கோளங்கள் இருப்பதால் பொதுமக்கள் பீதியடைய தேவை இல்லை என அரசு தெரிவித்துள்ளது.

SHARE